‘ஹவுஸ்மேட்ஸ்’ திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘ஹவுஸ்மேட்ஸ்’ படம் பற்றிக் காண்போம்..

பொதுவாக, ரூம் மேட்ஸ் என்பது தெரியும். அதென்ன ஹவுஸ்மேட்ஸ் என்பதை இப்படம் பொருத்தமாய் விவரிக்கிறது. அதாவது, புதுமணத் தம்பதிகளான தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கி வசிக்கின்றனர்.

அச்சூழலில், வீட்டுக்குள் விசித்திரமான அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேறுவதை உணர்கின்றார்கள். பின்னர், இந்த வீட்டிற்குள் காளி வெங்கட்- வினோதினி தம்பதியர் தங்கள் மகனுடன் வாழ்ந்து வருவது தெரிய வருகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு குடும்பங்களுக்குள்ளேயும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இந்த மாறுபட்ட சிக்கல் இவர்களுக்கு எப்படி நேர்ந்தது. இதிலிருந்து இவர்கள் மீண்டார்களா? இல்லையா என்பதே மீதிக்கதை.

சயின்ஸ் மிக்சிங்கில் ஹாரர், காமெடி கலந்து புதிர் முடிச்சுகளாக பயணிக்கிறது திரைக்கதை. படத்தின் முதல் காட்சியில் சுவரில் தெரியும் குழந்தைகளின் கிறுக்கல்கள் தொடங்கி கிளைமாக்ஸ் காட்சிவரை புதுப்புது யுக்திகள் கையாளப்பட்டிருக்கின்றன.

முதல் பாதியில் நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியில் திரில்லிங்காகவும் ஃபேண்டஸியாகவும் பயணிக்கிறது.

புதிய கதைக்களம் எடுத்து, அதை சுவாரஸ்யம் குறையாமல் வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

‘பிரேமம்’ படத்துக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் பின்னனி இசையில் பதற்றமான சூழலை அருமையாக பிரதிபலித்திருக்கிறது.

அதேபோல், எம்.எஸ். சதீஷின் கேமராவில் ஒரு வீட்டுக்குள் இரு குடும்ப நிகழ்வுகளை வெவ்வேறு கோணங்களில் நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

ஹீரோவாக வரும் தர்ஷன் தனது நடிப்பில் மிகவும் மெருகேறியிருக்கிறார். குறிப்பாக, காளி வெங்கட் – வினோதினி இருவரும் கிளைமாக்ஸில் அனைவரையும் கலங்க வைக்கும் நடிப்பு, மிகச் சிறப்பு.

மொத்தத்தில், இன்றைய பான் இந்தியா கலாச்சாரத்தில், சின்ன பட்ஜெட்டில் ஒரு புதிய முயற்சி. இதனை ஆடியன்சுக்கு அயிற்சி வராமல் உருவாக்கியதில் இப்படம் கலக்கியிருக்கிறது எனலாம், ரசிக்கலாம்.!

70%

ஹவுஸ்மேட்ஸ் திரை விமர்சனம்

  • Rating
Aarsha BaijudarshanHousematesHousemates movie reviewHousemates reviewKaali Venkatஹவுஸ்மேட்ஸ்ஹவுஸ்மேட்ஸ் திரை விமர்சனம்