Browsing category

Tamil News

நயன்தாரா சொன்ன வார்த்தையால், மயங்கி விழுந்த இயக்குநர்..

தெலுங்கு திரையில் ‘பகவந்த் கேசரி’ படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தற்போது ‘மன வரசங்கரபிரசாத் காரு’ பட ரிலீஸ் வேலையில் உள்ளார். சிரஞ்சீவி, நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெங்கடேஷ். சங்கராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 12-ந்தேதி வரும் இப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். படங்களில் நடிப்பதோடு சரி, அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே நான் ப்ரொமோஷன்களுக்கு வர மாட்டேன் சார் என […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ பட அப்டேட்ஸ்..

இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல அபிஷன் வருவாரா.. அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, இளங்கோ குமாரவேல் உள்பட பலரும் நடித்திருந்திருந்தனர். இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படத்துக்கு ‘வித் […]

இதுவரை இப்படியொரு கேரக்டரில் நயன்தாரா நடித்ததில்லை: ‘டாக்ஸிக்’ பட இயக்குநர் தகவல்..

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை கே.வி.என்.நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு வெளியாகும் யாஷ் நடித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மார்ச் 19-ந்தேதி இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது ‘டாக்ஸிக்’ படத்திலிருந்து நயன்தாராவின் லுக் மற்றும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் கங்கா என்னும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் எப்போது தெரியுமா?

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போதும் நயன் தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி உள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துகொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் […]

ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக் குவிக்கும் ஜனநாயகன்.. முழு விவரம் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே , பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் […]

இந்த ஆண்டில் வெளியாக போகும் முன்னணி நடிகர்களின் படங்களின் லிஸ்ட்..!

இந்த ஆண்டில் வெளியாகப் போகும் முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கென தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் பண்டிகை நாட்களில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டில் வெளியாகப்போகும் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஜனநாயகன் பராசக்தி ஜெயிலர் 2 கருப்பு சூர்யா 46 LIK மூக்குத்தி அம்மன் 2 அரசன் டிமான்டி காலனி 3 சர்தார் 2 வா வாத்தியாரே AK […]

உண்மையை மறைக்கும் பரசு, விஜயாவிடம் இருந்து தப்பிக்க ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை பற்றிய உண்மை தெரிந்தும் பரசு மறைக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கோபமாக ரோகினியிடம் எங்க அப்பாவுக்கு முத்து ஏதாவது கேட்டிருந்தால் செஞ்சிருப்பாரு நான் என்ன கேட்டாலும் செய்யமாட்டாரு ஏனென்றால் பிரச்சனையும் உன்னால தான் என்று ரோகிணியை திட்டிவிட்டு மனோஜ் சென்று விடுகிறார் மறுபக்கம் மீனாவும் முத்துவும் அண்ணாமலையை பற்றி விசாரிக்க பரசு வீட்டுக்கு வருகின்றனர் வெளியில இருந்த முத்து நீ […]

சூர்யா கேட்ட கேள்வி,சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி திட்டம் போட்ட மாதிரி அவள வேலை வாங்கிக்கிட்டே இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க மாதவி நந்தினியிடம் மேல துணி இருக்கு அத […]

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி.. நியூ இயர் வாழ்த்து தெரிவித்த ரவி மோகன்.!!

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி என நியூ இயர் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக […]

தனுஷின் 54-வது திரைப்படத்தின் அப்டேட்ஸ்..

பன்முகத்திறமையாளர் தனுஷ், போர்த்தொழில் பட இயக்குநரின் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் D54. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மிக குறுகிய காலகட்டத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. இந்நிலையில் D54 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் ‘அறுவடை’ என வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் புத்தாண்டு அல்லது பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆக்சன் […]