Browsing category

Tamil Cinema News

அக்ஷய் கண்ணாவின் ‘சுக்ராச்சாரியார்’ போர் முழக்கம் – ‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வெளியானது!

பிரசாந்த் வர்மா – RKD Studios – பூஜா கொல்லூரு கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பு ‘மகாகாளி’. பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) அடுத்த படைப்பாக உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் அக்ஷய் கண்ணா ‘சுக்ராச்சாரியார்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ‘சுக்ராச்சாரியாரின் போர் முழக்கம்’ (Shukracharya’s WarCry) எனும் பிரத்யேக அறிமுக காணொளி தற்போது வெளியாகியுள்ளது. மேலும், ‘மகாகாளி’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக […]

ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன்

நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம்-காம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. ‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை […]

“நடிகர் தனுஷ் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” – நடிகை வர்ஷினி

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், பின்னர் திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். வர்ஷினியின் கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. உணர்வுகளை வெளிப்படுத்துதல், ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் பரதநாட்டியம் தனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்ததன் […]

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில்!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட அழகான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, பான் இந்திய அளவில் தனது இசையால் கவனம் பெற்ற ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் […]

குடும்பம், நம்பிக்கை, மனமாற்றம்… ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ – படக்குழுவினர் நம்பிக்கை!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர், “திரில்லர், குடும்பக் […]

“இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்” – நடிகை சுமித்ரா தேவி!

பள்ளிப் பருவத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர் நடிகை சுமித்ரா தேவி. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரத்தை பள்ளி மேடையில் ஏற்று நடித்ததே, அவரது நடிப்புப் பயணத்திற்கான முதல் படியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா, பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்குகிறார். நடனப் பயிற்சியின் மூலம் பெற்ற முகபாவனைகள் மற்றும் உடல் மொழி, அவரது நடிப்புக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. தற்போது ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத […]

சென்சார் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

முழுநீள சஸ்பென்ஸ், க்ரைம், ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாலாஜி இயக்கியுள்ள இப்படம், தணிக்கைக்குச் சென்றபோது சென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமாக இருந்தாலும், எந்தவித வெட்டும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தணிக்கை குழுவினர் பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதை தங்களது படத்திற்கான தரச் சான்றிதழாகக் கருதி படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே ‘D3’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி, தனது இரண்டாவது […]

ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘அன்பே டயானா’- எந்த தேதியில் தெரியுமா?

Where Love Meets Chaos! காதல், சிரிப்பு, குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மையமாகக் கொண்ட feel-good ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘அன்பே டயானா’, வரும் ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV தளத்தில் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு இனிமையான அனுபவத்தை வழங்குகிறது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்ட இப்படம், பழமைவாத […]

இளைய திலகம் பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரில்லர் காமெடி திரைப்படம் தொடக்கம்!

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் […]