Browsing category

News

என் பெற்றோரை பெருமையில் நெகிழ செய்த உங்களை வணங்குகிறேன்: பாலாவுக்கு, அருண் விஜய் கடிதம்..

இந்தியத் திரையில் கவனம் ஈர்த்த இயக்குனர்களில் பாலா குறிப்பிடத்தக்கவர். அதற்கு அவர் இயக்கிய சேது, பிதாமகன், பரதேசி படங்களே சான்று எனலாம். இந்நிலையில், வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிய சூழலில், அருண் விஜய்யை வைத்து படத்தை மீண்டும் ஆரம்பித்தார் பாலா. படத்தின் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன. சில நாட்களுக்கு முன்புகூட வணங்கான் படத்தை அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் பார்த்ததாகவும் அப்போது விஜயகுமார் கலங்கிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, தனது […]

ஒரு மனநோயாளிதான் இப்படி எல்லாம் பேசுவார்: பாடகி சுசித்ரா பற்றி பயில்வான்..

ஜோதிகாவை பற்றி மிக இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட பாடகி சுசித்ராவை, பயில்வான் ரங்கநாதன் விளாசியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: கங்குவா படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனம் குறித்து ஜோதிகா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா ரசிகையா எழுதுகிறேன். முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருக்கிறது. மொத்த 3 மணி நேரமும் அப்படி இல்லை. கேமரா வேலைப்பாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருக்கிறது’ என கூறியிருந்தார். இதுகுறித்து […]

நமீதாவை பற்றி நயன்தாரா தற்போது விமர்சிக்க காரணம் என்ன?: வைரலாகும் கேள்விகள்..

நமீதாவை பற்றி தற்போது நயன்தாரா கூறுவதன் காரணம் என்ன? என இணையவாசிகளின் கேள்விக்கணைகள் வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. அட்லீ இயக்கிய ஜவான் படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்தார். ஜவான் ஹிட்டுக்கு பிறகு அவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழில் அவர் மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் டாக்சிக் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.மேலும் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நேற்று அவர் தனது 40-வது […]

இதுவரை பார்க்காத ஆர்.ஜே.பாலாஜியை படத்தில் பார்க்கலாம்: ‘சொர்க்கவாசல்’ பட இயக்குனர் உறுதி..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாகி, பின்னர் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர், நடிகர் சூர்யா நடிப்பில் ‘சூர்யா 45’ படமும் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சொர்க்க வாசல்’. இதில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃபுதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் […]

ரூ.600 கோடி பட்ஜெட்டில், சூர்யா நடிக்கும் அடுத்த படம் கர்ணா..?

ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்பது போல, சூர்யா நடிப்பில் மீண்டும் ஒரு வரலாற்றுப் படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிக் காண்போம்.. நடிகர் சூர்யா, கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து வெளிவந்த படம் கங்குவா, இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர், நடிகர் சூர்யா நடிப்பில் […]

தன் மகளின் காதல் மற்றும் கர்ப்பம் குறித்து, கே.பாக்யராஜ் உணர்வுபூர்வமான தகவல்..

தன் மகள் சரண்யாவின் காதல் திருமணம் மற்றும் பிறந்த பேரன் பற்றி நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் உணர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளுக்கு முன் மாதிரியாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஒற்றுமையாக வலம் வரும் தம்பதியர் கே.பாக்யராஜ்- பூர்ணிமா. இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர். சரண்யா, ‘பாரிஜாதம்’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் அவர் […]

மஞ்சரியின் கேப்டன்சி பறிக்கப்படுமா?..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் ரியா தியாகராஜன் எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் பெண் போட்டியாளர்களின் பர்மிஷன் இல்லாமல் எகிறி குதித்து விடுகிறார். இதனால் மஞ்சரி யாரையும் […]

கங்குவா : ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட்டா அப்டேட் இதோ..!

கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இந்தத் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்தில், யோகி பாபு, பாபி தியோல், திஷா பதானி, நட்டி நடராஜன், கருணாஸ், கார்த்தி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். […]

முன்னணி நடிகர் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. முழு விவரம் இதோ.!

முன்னணி நடிகர் படத்தை பின்னுக்கு தள்ளி அமரன் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும்,ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் […]

கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பைரவா ,ரஜினி முருகன், மகாநதி ,சர்க்கார், அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது […]