Browsing category

News

நடிகை மாளவிகா மோகனனுக்கு, ரஜினி ரசிகர்கள் ஆறுதல்..

பிரபல நடிகையான மாளவிகாவுக்கு “இப்படியொரு” வருத்தம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து காண்போம்.. சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மாளவிகா மோகனன். பின்னர், தனுஷுடன் இணைந்து மாறன், விக்ரமின் ‘தங்கலான்’ படங்களை தொடர்ந்து, கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்நிலையில், சரியான காலச்சூழ்நிலை அமையாததால் ரஜினிகாந்த்துடன் நடிக்க வேண்டியது மிஸ் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் 24-வது பட இயக்குனர் மாற்றம்: காரணம் என்ன?

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதுபோல இதோ ‘எஸ்கே-24’ திரைப்பட நிகழ்வு அமைந்துள்ளது. அதாவது.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும்’ SK23′ படத்தின் ஷூட் 70 % முடிந்த நிலையில் மீதமுள்ள சீன்ஸ் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ, சல்மான் கானின் படத்தை இயக்கி வருவதால் அந்த கேப்பில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24-வது திரைப்படத்தில் தற்போது […]

திரைப் பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி: கோப்பையை வெல்லும் அணி எது?

சினிமா பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விவரம் பார்ப்போம்.. சினிமா பிரபலங்களுக்கான இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இதில் இந்த ஆண்டு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் 8-ந் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி டப்பாங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். 2025 செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்11-வது சீசனுக்கு ஹைதராபாத், […]

‘விடாமுயற்சி’ கதைச்சுருக்கம் தெரிந்தாலும், கலெக்‌ஷன் ஏறுகிறது: ‘தல’ அஜித் ரசிகர்கள் உற்சாகம்

மகிழ்திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிப்பில் விடாமுயற்சி நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படம் தொடர்பாக மகிழ்திருமேனி மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக படத்தை விளம்பரம் செய்பவர்கள் எங்கள் படம் வித்தியாசமாக இருக்கும், ஹீரோ கதாபாத்திரம் மாறுபட்டது. படம் தீயாக இருக்கும். தியேட்டர் அதிரப் போகிறது. டான்ஸ், பாட்டு, சண்டை, காதல், பாசம் என அனைத்தும் எங்கள் படத்தில் இருக்கிறது என்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி […]

நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் இணைந்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் ! தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ […]

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !! பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், “ருத்ரா” கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை […]

மோகன்லாலின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமான ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டிக் கொண்டாடினர். புகழ்மிகு இயக்குநர் நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில், கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படம், உணர்ச்சிமிகு கதைக்களம் மற்றும் […]

நடிகை பார்வதி நாயருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து..!

நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமீர் போன்ற சில படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்த […]

“அஜித் சார் ரசிகர்கள் அவரிடம் இருந்து எப்பொழுதும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார்” – நடிகர் ஆரவ்!

அஜர்பைஜான் சாலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான BTS வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சில தருணங்கள் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ‘விடாமுயற்சி’ படக்குழுவின் அர்ப்பணிப்பையும் உணர்த்தியது. குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார். நடிகர் […]

புதிய கார் வாங்கிய கயல் சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து..!

கயல் சீரியல் நடிகை புதிய கார் வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. டிஆர்பியிலும் தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் சைத்ராவிற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவருக்கு திருமணம் […]