Browsing category

News

கமல் மன்னிப்பு கேட்கவில்லை; விசாரணை 10-ந்தேதி ஒத்திவைப்பு..

‘மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு ஈகோ தடுக்கிறது’ என தெரிவித்துள்ள நீதிமன்ற விசாரணை காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷன் விழாவில் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து கன்னடம் வந்தது’ என பேசியது பெரும் சர்ச்சையானது. கமல்ஹாசனை ‘மன்னிப்பு’ கேட்க வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் ‘தக் லைஃப்’ வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய கமல்ஹாசன் மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம். […]

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு ‘தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் […]

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூலில் ஹிட் கொடுத்த டாப் 10 திரைப்படங்கள்..!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூலில் மாஸ் காட்டிய பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் ஜூன் 6-ம் தேதி அதாவது வருகிற வெள்ளிக்கிழமை தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது மணிரத்தினம் இயக்கத்திலும் சிம்பு, திரிஷா, அபிராமி, போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் […]

தனது படத்தின் முதல் போஸ்டரை ஒட்டிய ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஹீரோ.!

ஓஹோ எந்தன் பேபி படத்தின் முதல் போஸ்டரை படத்தின் ஹீரோ ஒட்டியுள்ளார். இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக ருத்ரா நடித்துள்ளார். மேலும் மிதிலா பால்கர், மிஸ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு ,கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜூலை 11ஆம் […]

கமல் மீது கோர்ட் கடும் சாடல்: ‘தக் லைஃப்’ ரிலீஸ் தொடர்பாக சமாதான கடிதம்..

கர்நாடக வர்த்தக சபைக்கு, கமல்ஹாசன் எழுதியுள்ள அவசர கடிதம் காண்போம்.. தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது என கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையாக வெடித்தது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியிருந்தார். இதையடுத்து, தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று […]

‘தக் லைஃப்’ பட ரிலீஸ் விவகாரம்: இன்று நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்ன?

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் ரிலீஸாகுமா? என்பதை இன்று கோர்ட் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறும்போது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் உறுதியாக கூறுகிறார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது கருத்தை கண்டித்துள்ளனர். திரையரங்குகளும் […]

தீபிகா படுகோனே விலகிய விவகாரத்தில், சந்தீப் ரெட்டிக்கு மணிரத்னம் அறிவுறுத்தல்..

சந்தீப் ரெட்டி படத்திலிருந்து தீபிகா விலகியதற்கு இயக்குநர் மணிரத்னம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ பட ஹீரோயினியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோனே. அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி இணைந்துள்ளார். தீபிகா விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அது பரபரப்பானது. இதனையடுத்து, இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தீபிகாவை மறைமுகமாக சாடியிருந்தார். தனது எக்ஸ் தள பதிவில், ‘நான் ஒரு நடிகரிடம் […]

புடவை, மல்லிகைப்பூ ஹோம்லி லுக்கில் ரசிகர்களைக் கவரும் பிக் பாஸ் தர்ஷிகா..!

புடவையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தர்ஷிகா. முதல் சில வாரங்கள் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடிய தர்ஷிகா விஷால் மீது ஏற்பட்ட காதலால் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் சில வாரங்களுக்கு பிறகு எலிமினேஷனும் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தது அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

அனுஷ்கா நடித்த ஆக்‌ஷன் ஜானர் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நடிகைகளை பொறுத்தவரையில் 35 வயதை கடந்துவிட்டால், பெரும்பாலும் ஹீரோயின் வாய்ப்புகள் குறைவது இயல்பு என்பது தெரிந்ததே. அவ்வகையில், சமந்தா தனக்கேற்ற முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் வந்தால் நடிக்கிறார். வெப் சீரிஸிலும் ஆக்‌ஷனாக மிரட்டி வசீகரிக்கிறார். அதுபோல, அனுஷ்கா ஷெட்டியும் தற்போது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போதுதான் ‘காட்டி’ படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இப்படத்தில், அனுஷ்காவை […]

ஜனநாயகன் : கடைசி நாள் ஷூட்டிங், விஜய் செய்த விஷயம்..!

ஜனநாயகன் படத்தின் விஜய் கடைசி நாள் ஷூட்டிங் போது செய்த விஷயம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ,பிரியாமணி, பாபி தியோல்,மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு இந்த திரைப்படம் […]