Browsing category

News

செருப்பு அணியாமல் இருப்பது ஏன்? விஜய் ஆண்டனி விளக்கம்..!

செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தை விஜய் ஆண்டனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்துபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக பிரபலமான இவர் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் லியோ ஜான் பால் மார்கன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சமீபமாக காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் நடந்து வருகிறார். இதை […]

குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

குபேரா படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான […]

கார்த்தி நடிப்பில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் ‘மார்ஷல்’ பட அப்டேட்ஸ்..

கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்ஷல்’ என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். ‘சர்தார் 2’ படத்தை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால், இதன் படப்பிடிப்புக்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. மேலும், 1960-களில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக இது உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. இதற்கு ‘மார்ஷல்’ என தலைப்பிடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது […]

லோகேஷ் கனகராஜ் என்னை வேஸ்ட் செய்து விட்டார்: சஞ்சய் தத் ஓபன் டாக்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சஞ்சய் தத். இந்நிலையில், தற்போது தஞ்சய் தத் மனம் திறந்து பேசுகையில், ‘லியோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சில நிமிடங்கள் தான் வரும். எனக்கு சிறு கதாபாத்திரம் கொடுத்ததால், லோகேஷ் கனகராஜ் மீது கோபத்தில் இருக்கிறேன். லோகேஷ் என்னை வேஸ்ட் செய்துவிட்டார். ஆனால், விஜய்யுடன் சேர்ந்து நடித்தது பிடித்திருந்தது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். […]

நடிகை வனிதா நடித்துள்ள திரைப்படம் மீது, இளையராஜா வழக்கு..

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நான் இசையமைத்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது..’ பாடல் இடம்பெற்றுள்ளது. […]

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த சக்தித் திருமகன் வெளியீடு அறிவிப்பு..

‘சக்தித் திருமகன்’ படத்தின் அப்டேட் பார்ப்போம்.. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’. விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இப்படத்துக்கு முதலில் ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தையின் மூலம் ‘சக்தி திருமகன்’ என்று மாற்றினார்கள். சமீபத்தில் வெளியான ‘vijay antony […]

தனுஷின் ‘குபேரா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

‘குபேரா’ பட ஓடிடி வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது, இப்படம் ஜூலை 18-ந்தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் பாராட்டியிருந்தது […]

கணவர் ரெடின் கிங்ஸ்லி குறித்து பேசிய மனைவி சங்கீதா..!

கணவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் மனைவி சங்கீதா. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவி சங்கீதாவிற்கு ரெடின் கிங்ஸ்லி கோலாகலமாக வளைகாப்பும் நடத்தி இருந்தார் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கணவர் குறித்து சுவாரசிய தகவல்களை மனைவி சங்கீதா பகிர்ந்துள்ளார் அதாவது நாங்கள் திருமணம் செய்து கொண்ட பின் என்னிடம் கேட்காமல் அவர் […]

லோகேஷ் மீது கோபமாக இருக்கிறேன்.. சஞ்சய் தத் சொன்ன அதிர்ச்சி காரணம்.!!

லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் வீடியோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் சஞ்சய் தத். இவர் தற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருப்பதாக பேசியுள்ளார். ஏனென்றால் லியோ படத்தில் அவருக்கு பெரிய […]

காமெடி ஜானரில் உருவான ‘தேசிங்குராஜா-2’- திரைப் பார்வை..

விமல் நடிப்பில் ‘தேசிங்கு ராஜா’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் 2-ம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்துக் காண்போம்.. காவல்துறையில் பணியாற்றும் விமலுக்கும், மற்றொரு ஏரியா காவல்துறை அதிகாரி ‘குக் வித் கோமாளி’ புகழுக்கும் யார் பெரிய ஆள் என்கிற போட்டி நிலவுகிறது. இச்சூழலில் அமைச்சரின் மகனை காப்பாற்ற வேண்டும். மேலும், கூவத்தூரில் அமைச்சர்கள் அடித்த லூட்டியான வீடியோ டிஸ்க் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து என்னென்ன நிகழ்கின்றன என்பதை […]