Browsing category

News

விஷால் நடித்து இயக்கிய ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை […]

‘சக்தித் திருமகன்’ பட கதை திருட்டு விவகாரம்: இயக்குநர் விளக்கம்..

அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார். இதனிடையே, இக்கதை தான் எழுதி காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ‘தலைவன்’ என்ற படத்தின் கதை என சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் குறிப்பிட்டிருந்தார். சுபாஷ் சுந்தரின் பதிவு […]

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் சந்தானம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் தனது காதலியை இன்று மணந்தார்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபிஷன், அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு காதலியும் வெட்கப்பட்டார். திருமண நிகழ்வும் உறுதி செய்யப்பட்டது. அவ்வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். மேலும் சுவாசிகா,யோகி பாபு, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற […]

ஜாய் கிரிசில்டாவிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

ஜாய் கிரிசில்டாக்குவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சமையல் கலை வல்லுனராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு சமையல்கலையே தற்போது தூள் கிளப்பி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிசில்டாவிற்கு தற்போது […]

ஜாலியாக கேம் விளையாடும் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் கேம் விளையாடின்றனர் அதாவது ஒருவர் கையை நீட்டிக் கொண்டிருக்க மற்றொருவர் அடிக்கும் போது கையை எடுத்து விட வேண்டும் அப்படி எடுக்காமல் […]

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான நடிப்பு மற்றும் பன்மொழி இசை திறமைக்காக பெயர் பெற்ற ஆண்ட்ரியா, இந்த உலகளாவிய கீதத்துக்கு தனது குரல் மூலம், தனித்துவமான ஆன்மீகத் தொனி, உற்சாகம் மற்றும் நவீன மெருகை வழங்கியுள்ளார். பெரும் ஆற்றல், அசத்தும் […]

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! 🔱 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

ஹனு மேன் திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு […]

MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார்

தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில், எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி […]