Browsing category

News

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க, ஐகோர்ட் உத்தரவு..

இசைஞானி இளையராஜாவின் திரைப்பாடல்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை. எந்தக் காற்றிலும் கலைந்து போகாதவை என்பது தெரிந்ததே. அவ்வகையில், இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமைக்காக வழக்கும் தொடர்ந்து வருகின்றார். இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மாதீஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை […]

இந்த வாரம், ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

வீட்டுக்குள் வந்த நவீன திரையரங்கமாக ஓடிடி தளம் ஓங்குகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. ஆர்யன்: பிரவீன்.கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கிரைம்-திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்’. இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று ரிலீசாகிறது. ஆண் பாவம் பொல்லாதது: ரியோ ராஜ் நடிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரிலீசான காமெடி-ரொமான்டிக் திரைப்படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், […]

தீபிகா படுகோன்- ராஷ்மிகா இருவர் சொல்வதும் சிறப்பு: கீர்த்தி சுரேஷ் ஆதரவு..

திரைப்படத் துறையில் ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர். ஏனெனில் படத்தின் பட்ஜெட், கோடிகளில் சம்பளம், கால்ஷீட் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனின் 8 மணி நேர வேலை கோரிக்கை பலரையும் கவர்ந்துள்ளது. ராஷ்மிகா மந்தனாவுக்குப் பிறகு, இப்போது கீர்த்தி சுரேஷும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 8 மணி நேர வேலை மாற்றம் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று ராஷ்மிகா கூறியிருந்தார், […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா; விஜய் மூவ் என்ன?: ரசிகர்கள் ஆர்வம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு வெளிவருவது தெரிந்ததே. 3 வருடங்களாக விஜய்யின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. கடைசியாக ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா 2023-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு வெளியான லியோ மற்றும் GOATஆகிய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. எனவே, 3 வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், தன் கடைசிப் பட இசை வெளியீட்டு விழா […]

ரஜினியின் ‘தலைவர்-173’ பட இயக்குநர்? ராம்குமாரின் வைரல் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் மாபெரும் வாய்ப்பை இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றிருப்பதாக தெரிகிறது. இவர்தான் ‘தலைவர்-173’ திரைப்படத்தின் இயக்குநர் என கூறப்படுகிறது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கி, வெற்றிப்படமாக கொடுத்து, தேசிய விருதையும் வென்றுள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதனைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் STR-49 திரைப்படத்திற்கு பூஜை நடைபெற்று, இயக்குவதற்கான பணிகளில் இருந்த ராம்குமாருக்கு ரஜினியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துப்போகவே ‘தலைவர்-173’ பட இயக்குநர் […]

ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்து, நடிகை சமந்தா பிரச்சாரம்..

பெண்மை புனிதமானது. பெண்ணியம் மகத்தானது. பெண் இல்லாமல் உலகில்லை என ஆன்றோரும் சான்றோரும் எடுத்தியன்றாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்வது மனிதகுலக் கேடு. என்று தரும் இந்த அவலம். பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்’ […]

பிக் பாஸ் கேட்ட கேள்வி.. போட்டியாளர்களின் பதில்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தற்போது ஸ்கூல் டாஸ்க் நடந்து வரும் நிலையில் தற்போது எஸ்கேஷன் அழைத்துச்சென்ற இடத்தில் பார்த்த புகைப்படத்தில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தையும் அதற்கான காரணத்தையும் கூறுமாறு […]

விஜயா சொன்ன வார்த்தை, அண்ணாமலை கொடுத்த பதில்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா சொன்ன வார்த்தைக்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வமும் முத்துவும் காரை நிறுத்திவிட்டு இளநீர் குடிக்கின்றனர். அந்த வழியாக சென்ற அருண் அவரது நண்பருடன் சேர்ந்து முத்துவை கவனித்து விட்டு வந்து இளநீர் குடிக்கின்றனர். உடனே அருண் வழக்கம் போல் முத்துவை வம்பு இழுத்து அசிங்கப்படுத்தி பேசுகிறார். பண்ற வேலை எல்லாம் பண்ணிட்டு மாலை போட்டுட்டா சாமி மன்னிச்சிடுவாருன்னு […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,நந்தினி எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் விஜய் நீ சூர்யா அண்ணா கெட்டதா இருக்கணும் அவர விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டு போக நந்தினி கல்யாணத்திடம் அவர் என்னை […]

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் எஸ்கேஷன் செல்லும் நேரம்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தற்போது ஸ்கூல் டாஸ்க் நடந்து வரும் நிலையில் தற்போது இன்றைய டாஸ்க் அனைவரையும் அழைத்துக் கொண்டு எஸ்கேஷன் செல்ல வேண்டும் என சொல்லுகின்றனர். மியூசியத்தில் […]