Browsing category

News

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?இயக்குனர் சுதா கொங்காரா கொடுத்த அப்டேட்.!!

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த கேள்விக்கு சுதா கொங்காரா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் […]

அஜித்-விஜய் படங்களுக்கு இசையமைக்க சாம்.சிஎஸ். ஆர்வம்..

தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்துப் பேசிய சாம் சி.எஸ், ‘அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் எப்போது ரிலீஸ்?

கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தின் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. டிசம்பர் 12-ம் வெளியீடுக்கு திட்டமிட்டப்பட்டு, பின்பு டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது கோடை விடுமுறைக்கு ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குள் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் […]

பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்:’டாக்ஸிக்’ படம் பற்றி ஹூமா குரேஷி நம்பிக்கை..

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடித்துள்ள ‘த டாக்​ஸிக்’ படத்தில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி உள்பட பலர் பலர் நடித்துள்ளனர். கன்​னடம், ஆங்​கில மொழிகளில் உருவாகும் இப்படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் மொழி மாற்​றம் செய்​யப்​பட்டு வெளி​யாகவுள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து, இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை ஹுமா குரேஷி தெரிவிக்கையில், ‘டாக்ஸிக் படம் பற்றி இப்​போது என்​னால் பேச முடி​யாது. அது பெரிய […]

விரைவில் அஜித் குமார் சாருக்காக இசையமைக்க போகிறேன்.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இன் சமீபத்திய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர் தமிழில் கைதி, புரியாத புதிர் ,விக்ரம் வேதா ,அடங்க மறு, நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் […]

பொங்கல் ரேசில் இணைந்த அஜித் குமார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.!

பொங்கல் ரேசில் அஜித் குமார் இணைந்துள்ளார் தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு பல பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் தி ராஜா சாப் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படமும் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல் கருப்பு […]

பிரம்மாண்டமாக நடக்கப் போகும் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா.. வெளியான சூப்பர் தகவல்.!!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் வெளியாகி மிகுந்த […]

‘சிறை’ படம் குறித்து, விக்ரம் பிரபு சுவாரஸ்ய தகவல்..

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில், ‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். ‘ஒரு போலீஸ் கதை இருக்​கு, கேட்கிறீங்​களா? என அவர் கேட்​டதும் ‘டாணாக்​காரன்’ படத்திற்கு பிறகு, போலீஸ் கதைகளா நிறைய […]

‘சிக்மா’ படப்பிடிப்பு நிறைவு: கதைக்களம் பற்றி ஜேசன் சஞ்சய் அப்டேட்ஸ்..

விஜய்​யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குந​ராக அறிமுகமாகும் ‘சிக்​மா’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் அட்​வென்​சர் காமெடி திரைப்​பட​மான இதில் சந்​தீப் கிஷன் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவருடன் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக்ஜேபி, சம்​பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். […]