Browsing category

News

வக்கீலாக வடிவேலு நடிக்கும் ‘போர்முழக்கம்’ பட அப்டேட்ஸ்..

வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது ‘போர்முழக்கம்’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். லாலு மற்று டோனா தாமஸ் தயாரிக்கும் இப்படத்தை பினில் இயக்கவுள்ளார். ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் வக்கீலாக வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து […]

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தில் மம்முட்டி?

ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை தற்போதைக்கு KHxRK என அழைக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. KHxRK படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி, உங்க பட ஹீரோ யாரு நெல்சன்? என சினிமா ரசிகர்களை கேட்க வைத்துவிட்டது. இந்நிலையில் KHxRK படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு மம்முட்டியை கேட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனின் கேங்ஸ்டர் நண்பராக மம்முட்டி நடிக்கிறார். கமலும், மம்முட்டியும் இதுவரை சேர்ந்து நடித்ததே […]

ஓடிடி.யில் ‘வித் லவ்’ படம் வெளியீடு..

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் […]

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை – இயக்குநர் விஜய்

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை – இயக்குநர் விஜய் மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் […]

ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது

‘தபாஹி’ – ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: யாஷ் – கியாரா இணைந்து மார்ச் 2 ஆம் தேதி டாக்ஸிக் உலகின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டு வருகிறார்கள். டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் முதல் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது ‘தபாஹி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic […]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? […]

வடசென்னை லவ் & காமெடி களேபரம் – ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் ட்ரெண்டிங்!

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு! வடசென்னை லவ் & காமெடி களேபரம் – ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் ட்ரெண்டிங்! பெரம்பூர் பின்னணியில் பரபரக்கும் காதல் கதை – ‘அன்பே டயானா’டைட்டில் டீசர் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe […]

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 27-ந்தேதி, இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. `ஆண்டவன் கட்டளை’, `கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் எம். மணிகண்டனின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா […]

மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி சீமான் கருத்து..

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி. அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது இந்த இளவயதில் அவரிடம் இருப்பது வியப்பாக இருக்கும். இரண்டாவது எங்கள் மண்சார்ந்த கதைகளை […]

தடைகளை போடும் திரைத்துறையினர் யார்?: சிவகார்த்திகேயன் விளக்கம்..

‘தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், ‘திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் நடைபெற்றன. மதுரையில் ‘தாய் கிழவி’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் தடைகள் யார் போடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‘அது யார் என்று சொல்லிவிட்டால், யூடியூப்பில் அதைப் போட்டு நிறைய பேர் பார்ப்பார்கள். அதை இன்னொருத்தரை குறை சொல்ல […]