Browsing category

Latest News

‘லப்பர் பந்து’ இயக்குனருடன், நடிகர் தனுஷ் புதிய கூட்டணி

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது செம பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். இத்தகு பரபரப்பான நிலையில் லப்பர் பந்து இயக்குனருடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் அறிவோம்.. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். மேலும், […]

‘கோட்’ திரைப்படத்தை மிஞ்சியது ‘அமரன்’ வசூல்.. விவரம்

எந்த துறை என்றாலும், அதில் முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் வெற்றியாகும் தானே. ஆம்.. அதுபோல அமைந்திருக்கிறது அமரன் ஹீரோ எஸ்கேவுக்கு..! அதாவது, கடந்த சில வருடங்களாகவே ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியான ‘அயலான்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த […]

எந்த வெடி சரியா வெடிச்சது, எது வெடிக்கல.. சொல்லிடலாம் வாங்க, வெளியான முதல் ப்ரோமோ..!

  எந்த வெடி வெடிச்சது எது வெடிக்கல சொல்லிடலாம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து , எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆலும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி புதுமையாக ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். […]

நூறு கோடியை நெருங்கும் அமரன்.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும்,ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியான இந்த […]

அமரன் பட குழுவை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டு..போட்டோஸ் இதோ..!

ரஜினிகாந்த் அமரன் பட குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31 தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உருவான இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மறைந்த மேஜர் முகூர்த்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த் அமரன் […]

பாக்கியாவைக் கிண்டல் பண்ணும் கோபி, வருத்தத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்கியாவை கோபி கிண்டல் பண்ண பாக்கியா வருத்தப்பட்டுள்ளர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனிய காம்பெட்டிஷனில் ஜெயித்து விட பாக்யா என அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் இனியா ஓடி வந்து கோபியை கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார். இதைப் பார்த்து பாக்கியா வருத்தபட்டு கொண்டிருக்க இனியா கோபியிடம் உங்களால் தான் நடந்துச்சு என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். பிறகு கோபியை மேடையில் அழைத்து என்னோட வெற்றிக்கு காரணம் என்ன அப்பா […]

ட்ரெண்டிங்கில் சத்யாவின் திருட்டு வீடியோ, ரோகினி போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

சத்யாவின் வீடியோவை சிட்டி ரிலீஸ் செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோடு விஜயா பூ கட்டுபவர்களிடம் ஓவராக பேசி, ஆட்டோவில் ஏறி சென்றார் பிறகு மீனா வீடு வீடாக சென்று பூ கொடுத்துக் கொண்டிருக முத்து போன் பண்ணுகிறார் இது என்ன புது நம்பரில் இருந்து பண்ணி இருக்கீங்க என்று கேட்க, பேசாம இருக்க முடியல அதனால தான் போன் வாங்கி பேசிக்கிட்டே இருக்க […]

சிங்காரத்தை அசிங்கப்படுத்திய சுந்தரவல்லி, நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் மன்னாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி நீங்க கிளம்புங்க என்று குடும்பத்தினரிடம் சொல்ல சரிமா நாங்க கிளம்பிடுறோம். சின்னையாவையும் பெரிய யாவையும் பார்த்துவிட்டு நாங்க கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் […]

‘அமரன்’ சாதனையை ‘குபேரன்’ முறியடிக்கும்: இணையத்தில், தனுஷ் ஃபேன்ஸ் புகைச்சல்?

தமிழ்த்திரையில், ஒவ்வொரு நடிகரும் தனித்தன்மை கொண்டவர்கள் தான். அவரவர் திறமையினால் பாக்ஸ் ஆபீசில் உச்சம் தொடுகின்றனர். இதில், ரசிகர்கள் கம்பு சுழற்றி இணையத்தில் விவாதிப்பது அபத்தமானது தானே. ஆம், தனுஷின் 50-வது படமான ராயன் படத்தினை அவரே இயக்கி நடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ராயன் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபீஸில் இந்திய […]

3 மாசத்துல 5 மாச கர்ப்பம் எப்டி?: நடிகை எமி ஜாக்சனின் வைரலாகும் மேட்டர்..

தமிழ்த்திரையின் தங்கச்சிலை ‘துரையம்மா’ கேரக்டரை நினைவிருக்கிறதா? அதாங்க எமி ஜாக்சன்.. அந்த அழகு இளவரசியின் திரைவலம் குறித்து பார்ப்போம்.. வாங்க.. லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து,அழகி போட்டியிலும் கலந்து கொண்டார். மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், இரண்டாவது இடம் பிடித்தார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய், தான் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தில் நடிக்க வைக்க வெளிநாட்டு பெண் ஒருவரை தேடிக் […]