Browsing category

Latest News

இன்றும் அதே அழகு, அதே இளமை… மகன் அதீப்புடன் நடிகை சிம்ரன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், தனது அழகு, வசீகரமான புன்னகை மற்றும் தனித்துவமான ஸ்டைலால் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது தனது மகன் அதீப்புடன் அழகாகக் காட்சியளிக்கும் சிம்ரனின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலங்கள் மாறினாலும், அவரது வசீகரமும் கம்பீரமும் இன்னும் தனித்துவமாகத் தெரிவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு காலத்தில் தனது நடனத்தாலும், நடிப்பாலும் திரையில் தனி முத்திரை பதித்த சிம்ரன், இன்றும் தனது ஸ்டைலால் ரசிகர்களை ஈர்த்து […]

சீன் ஒரு ஃபிரெஷ்ஷான படைப்பு – துபாயில் நடிகர் சூர்யா பேச்சு!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்துள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஷின் ஷ்யாம் […]

மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம், தற்போது ‘ஃபேமிலி பாய்’ (Family Boy) திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மித்துன் மாணிக்கம் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் […]

வைபவ் நடிக்கும் மணிகண்டா – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். முன்னதாக ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது ‘மணிகண்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் […]

நவீன் சந்திராவின் ‘என்.சி. 51’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் எனத் திரையுலகில் பல்வேறு தளங்களில் பயணித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவுடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்.சி. 51’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆர்.பி. பாலா இயக்குகிறார். ‘லெவன்’ திரைப்படத்தில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த நவீன் சந்திரா, கதாபாத்திரத் தேர்வில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அவரது 51-வது திரைப்படமாக உருவாகும் இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் […]

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் “ராமாயணா” படத்தின் 3வது பாடல் வெளியானது

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ படத்தின் இசைப் பயணத்தில் புதிய மைல்கல்லாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. ராமர் – சீதையின் அன்பு, திருமணம் மற்றும் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகளுடன் வெளிப்படுத்தும் இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அரண்மனையின் பிரம்மாண்டம், ராமர் – சீதையின் திருமண நிகழ்வுகள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் […]

நடிகை ‎தேவயானி மகள் பிரியங்கா நடிக்கும் புதிய திரைப்படம் ’பிளாக் நைட் பாய்ஸ்’

Arul Murugann Picture மற்றும் Dream Runway 26th Century நிறுவனங்கள் சார்பில் க.இ. மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. அமல் அஜித் கதாநாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், தனது சமூக வலைதள வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது […]

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நயன்தாரா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா இப்படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்கின்றனர். இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான […]

பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் கமல் ஸ்ரீதேவி

சீயோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவா மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சீயோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் இணைந்து நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குடும்பத்துடன் இணைந்து […]

‘தாரா’வாக அறிமுகமாகும் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ருக்மிணி வசந்த், ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்குடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில், ருக்மிணி வசந்த் ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார். […]