Browsing author

Suresh

சிம்புவின் சாதனையை முறியடித்தார் தளபதி விஜய்..

தளபதி விஜய்யின் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படம், பொங்கலை முன்னிட்டு 9-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், வசூலில் மட்டுமல்லாமல் தற்போது சோஷியல் மீடியாவிலும் தன் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார் விஜய். அதாவது, தமிழ் நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் விஜய். 14 .6 ஃபாலோவர்ஸ் பெற்று இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர் என்ற சாதனையை விஜய் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு சிம்புதான் இந்த சாதனையை […]

‘கல்கி-2’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்?

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ப பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குப் பின், தீபிகாவும் ‘கல்கி […]

கண்மணி அன்னதான விருந்து: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி கொடுக்கும் திட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தன்னுடைய அன்னையில் பெயரில் அன்னதானத் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, ‘பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை, ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும், பசியில் யாரும் வாடக்கூடாது எனும் நோக்கத்தில், என் அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தைத் தொடங்கி இருக்கிறேன். 20 […]

கமலின் லேட்டஸ்ட் லுக்: ரசிகர்கள் கோரிக்கை..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதற்கிடையில் கமல், தன் லுக்கை லைட்டாக மாற்றி இருக்கின்றார். அந்தளவிற்கு பெரிய மாற்றங்கள் கமலின் லுக்கில் இல்லை என்றாலும், அவரின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இந்த லுக்கில், கமல் ‘கல்கி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் கல்கி. 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு […]

‘சோத்துக்கட்சி’ பெயரை மாற்ற வாய்ப்பே இல்லை: பார்த்திபன் உறுதி..

‘நான் தான் சிஎம்’ என்ற படத்துக்கு எழுந்த சர்ச்சைக்கு, பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரிக்க இருப்பதாக ‘நான் தான் சி.எம்’ என்ற படத்தை அறிவித்தார். அப்போது வெளியிட்ட பதிவில், இப்படத்தில் சிங்காரவேலன் என்ற அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாகவும், சோத்துக் கட்சி என்பது கட்சியின் பெயர் எனவும், படகுதான் சின்னம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுவே சர்ச்சையாக உருவானது. பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பார்த்திபன் தனது […]

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ டீசர் இன்று வெளியீடு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை, தர்மதுரை, கனா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும், தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுனுடன் இணைந்து ‘தீயவர் குலை நடுங்க’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் […]

ஆறு வருடங்கள் கழித்து ரவிமோகன் நிறைவேற்றிவிட்டார்: யோகிபாபு பெருமிதம்..

ரவிமோகன் குறித்து யோகிபாபு பகிர்ந்துள்ள தகவல் பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில், ரவிமோகன் – யோகிபாபு கூட்டணி பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் ஒன்றிணைந்துள்ளது. இம்முறை ரவி மோகன் படத்தின் இயக்குநர்; யோகிபாபு கதையின் நாயகன். அதாவது, ஒரு முன்னணி ஹீரோவின் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறார். இது பற்றி பற்றிக் குறிப்பிட்டுள்ள யோகிபாபு, ‘கோமாளி’ படப்பிடிப்பின்போது, ‘நான் படம் டைரக்ட் செய்தால், நீங்கதான் ஹீரோ’ என்றார். […]

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வரவில்லை: இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு..

‘நக்சல்கள்’ பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்திய மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். ‘நக்சல்’ இளைஞர்கள் சரணடைந்தால், அரசு அவர்களை மன்னித்து, முறையான ஆயுதப் பயிற்சியளித்து, அரசின் அதிரடிப்படையில் கமாண்டோ வேலைவாய்ப்பு வழங்கும் என்கிற அறிவிப்பை நம்பிச் சென்று, போலி ரெக்ரூட்மெண்ட் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் ஓர் அப்பாவி மலைவாழ் பழங்குடி இளைஞனின் கதையாக ‘தண்டகாரண்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை. இவரது முதல் படமான ‘‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற ஒன்று. ‘லேர்ன் […]

ரோபோ சங்கர் உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் சாதித்து, திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து […]

ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் அருண்குமாரா?

ரஜினி-கமல் இணையவிருக்கும் படத்தின் தகவல்கள் குறித்துப் பார்ப்போம்.. கமல்ஹாசன் விரைவில் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாக அறிவித்தார். அதைப்போல, ரஜினியும் கமலுடன் இணைவதை உறுதிப்படுத்தினார். அவ்வகையில், 46 வருடங்கள் கழித்து கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இப்படம் எப்போது துவங்கும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. கமல்ஹாசன் தற்போது அன்பறிவு இயக்கத்தில் KH237 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. […]