Browsing author

Suresh

நயன்தாரா-கவின் நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் அப்டேட்..

‘ஹாய்’ படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறாமல் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தற்போது அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில் புதிதாக இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்திருக்கிறார்கள். தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் […]

ஹாரர் காமெடியில் உருவாகும் ‘ரஜினி கேங்’ படத்தின் கதை..

‘லோகா’ என்ற படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் த்ரில்லிங் சப்ஜெக்ட் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம் ‘ரஜினி கேங்’. இதில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும் ராஜேந்திரன், ராமதாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா என பலர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் […]

க்ரைம் த்ரில்லர் மூவி ‘மவுனம்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது திகில் சார்ந்த கதைகள் வரவேற்பு பெற்று வருகின்றன. அவ்வகையில், குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு வெளிவர இருக்கும் க்ரைம் த்ரில்லர் மூவி பற்றி காண்போம்.. கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘மவுனம்’. இப்படத்தில் அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர்.ரித்திக், சுமன் உள்பட பலர் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார். மேஜிக் மக் மூவிஸ் தயாரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், […]

ரஜினி-கமல் இணையும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறாரா?

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவின. இது பற்றிய உண்மை நிலவரம் என்ன என காண்போம்.. தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது ‘ட்யூட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனால் தற்போது, இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக பிரதீப் தெரிவிக்கையில், ‘ரஜினி-கமல் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

கரூரில் விஜய்யின் அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், விஜய்மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன என்பது தெரிந்ததே. எனவே, இம்மாதம் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் சிங்கிள் பாடல் தள்ளிப்போனதாக சொல்லப்படுகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ சிங்கிள் வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் பாடல் வெளியிடுவது சரியாக இருக்காது என தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தற்போதைக்கு […]

‘காந்தாரா’ படம் குறித்து, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கருத்து..

‘காந்தாரா: சாப்டர்1 படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார். காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர், ‘ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது’ என தெரிவித்துள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் […]

‘வேட்டுவம்’ படம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் அப்டேட்..

‘அட்டைக்கத்தி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். பின்னர் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டர் பரம்பரை என்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் தற்போது இயக்கி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம் அறிவியல் புனைகதை படமாக இருக்கும் என அப்டேட் கொடுத்துள்ளார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் தினேஷ், ஆர்யா, சோபிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘வேட்டுவம்’ […]

அவமதிக்க வேண்டாம்: ‘காந்தாரா’ படக்குழு வேண்டுகோள்..

பொதுமக்கள் மத்தியில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே, இப்படத்தில் உள்ள தெய்வ கதாபாத்திரங்களை முன்வைத்து பொதுமக்கள் சிலர் திரையரங்குகளுக்குள், திரையரங்கிற்கு வெளியே என நடிப்பது போன்று சில வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பலரும் இப்படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரம் போல் சத்தமிட்டு ரீல்ஸ் போட தொடங்கினார்கள். இந்த விஷயங்களை முன்வைத்து ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை […]

தம்பி இராமையா கதை வசனத்தில் ஹீரோவாக நட்டி நட்ராஜ்..

அப்பா எழுதிய அரசியல் கதையை மகன் இயக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை கொண்டது. அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட […]

‘பிக்பாஸ்’ ஸ்டுடியோவை மூட, அரசு அதிரடி உத்தரவு..

மனித உணர்வுகளை சீண்டும் கேம்ஷோவாக பிக்பாஸ் அமைந்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இருப்பினும் பணத்திற்காகவும் மேலும், பிரபலம் ஆவதற்காகவும் இத்தகைய ஷோக்கள் பல மாநிலங்களில் தொடர்கின்றன. பார்வையாளர்களுக்கு வேடிக்கையாய் பொழுது போகிறது. இது சரியா தவறா என்பதும் விவாதத்திற்கு உரியதாகிறது. இவ்வாறு தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடைபெறும் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், வலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் […]