Browsing author

Suresh

நிலைமை மோசமாகி வருகிறது: தனுஷ் பட ஹீரோயின் கவலை..

பாலிவுட்டில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கிரித்தி சனோன். இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய கிரித்தி, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘டெல்லியில் காற்று மாசுபாடு மோசமாகி வருகிறது. நான் ஒரு டெல்லிவாசி. கடந்த காலத்தில் அது எப்படி இருந்தது என்பது எனக்குத் தெரியும், இப்போது அது மோசமாகி வருகிறது. இதைத் […]

ரஜினி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, ரஜினி பலரிடம் கதை கேட்டு வந்தார். கடைசியாக ‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடித்திருந்த்து. இதில், ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை தற்போது ரஜினி தேர்வு செய்திருக்கின்றார். இந்நிலையில், இது பற்றிய அறிவிப்பை தனது பிறந்தநாளில் வெளியிடலாம் என்ற முடிவிற்கு ரஜினி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அன்று ‘ஜெயிலர்-2’ படத்தின் […]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் […]

விஜய் ரசிகர்களுக்கு நியூ யீயர் ட்ரீட்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ள நிலையில், இதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை சம்பந்தப்பட்ட பாடகர்களை வைத்து பாட வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கான்செர்ட் ஐடியாவுடன் இசை […]

இணையவழி துன்புறுத்தலுக்கு தண்டனை வேண்டும்: நடிகை ஹூமா குரேஷி வலியுறுத்தல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​யின் ‘காலா’, அஜித்​தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, தற்போது யாஷின் ‘டாக்​ஸிக்’ உள்பட சில படங்​களில் நடித்து வருகிறார். இவர், பெண்​களுக்கு எதி​ரான இணை​ய​வழி துன்​புறுத்​தல், ஈவ்​-டீசிங் உள்​ளிட்ட தொல்லைகள் குறித்துக் கூறும்​போது, ‘எனது சமூக வலைதளப் பக்​கத்​தில் சிலர், ‘உங்​களு​டைய பிகினி புகைப்படத்தைப் பகிருங்கள்’ என கேட்கிறார்​கள். இது அரு​வருப்​பானது, அது​போன்ற கருத்​துகள் மிக​வும் வேதனையளிக்​கிறது. ஒரு பெண்ணை உடல் ரீதி​யாகவோ அல்​லது தெரு​வில் துன்புறுத்தி​யதற்​காகவோ […]

ரஜினி நடிக்கும் ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர்…

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து, கதை கேட்கும் பணிகளில் ரஜினி ஈடுபட்டுள்ளார். இளம் இயக்குநர்கள் அவரை சந்தித்துக் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது. ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகலுக்கு பிறகு, ரஜினியிடம் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் கதை சொல்லியுள்ளார். மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதையில் ரஜினி இம்ப்ரஸ் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ‘தலைவர் 173’ படத்தை ராம்குமார் […]

வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம்: நடிகை ரகுல் பிரீத் சிங் எச்சரிக்கை..

பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இது குறித்து புகார்களும் அளித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், நடிகை, ருக்மணி வசந்த், அதிதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடிகைகள் அது தங்களுடைய நம்பர் இல்லை, எனவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தனது […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: கின்னஸ் சாதனை படைக்குமா?

விஜய்யின் கடைசிப் படமாக வெளியாகவிருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் இறுதியில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவோடு சேர்த்து, ஒரு கான்சர்ட்டையும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த கான்சர்ட்டில் திரையுலகில் […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 24-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இதற்கு வேல்ஸ் நிறுவனம்-சிம்பு இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது சிம்புவுடன் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘விடுதலை’ படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ‘செக்க சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு சிம்பு-விஜய் சேதுபதி இருவரும் […]

புதிதாக இசை நிறுவனம் தொடங்க அனிருத் திட்டம்..

கூலி, ஜெயிலர்-2, ஜனநாயகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத். இப்படத்தில் அவருக்கு சம்பளமாக அல்லாமல் இசை உரிமையினை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரிமையினை விற்காமல் புதிதாக இசை நிறுவனம் ஒன்றிணைத் தொடங்கினால் என்ன என்ற ஆலோசனையில் இருக்கிறார் அனிருத். இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ‘அரசன்’ படத்தின் ஒட்டுமொத்த பாடல்களையும் அதிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். மேலும், தனது இசையில் அவ்வப்போது […]