Browsing author

Suresh

‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் வசூல்: படக்குழுவினர் மகிழ்ச்சி..

பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சில சமயம் சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களைவிட, புதுமுக நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுகின்றன. கதைதான் ரசிகர்களை ஈர்க்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ரியோ ராஜ் நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம், வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. ரியோ ராஜ் நடிப்பில் […]

அஜித் நடிக்கும் புதிய படம்: இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பும் பாராட்டப்பட்டது. மேலும் பிரபு, பிரசன்னா, திரிஷா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி […]

ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்; வில்லனாக ஆர்யா: ‘வேட்டுவம்’ படம் அப்டேட்ஸ்..

‘அட்டகத்தி’ படத்தின் மூலமாக அறிமுகமானார் இயக்குநர் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் கபாலி, காலா, ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, […]

அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது..

அஜித் நடித்த ‘குட் பேட் அக்​லி’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்கவுள்ளார் அஜித். இப்​படத்​தின் அறி​விப்பு ஜனவரி மாதம் வெளியாகும்​ என கூறப்படுகிறது. அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறு​வனத்​தை​யும் சொந்தமாக வைத்துள்ளார். இந்நிறுவனம், துபாய், பெல்​ஜி​யம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகு​தி​களில் நடந்த கார் பந்​த​யங்​களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்​றாவது இடத்​தை​யும், ஒரு​முறை 2-வது […]

புதிய திறமையாளர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் முன்னுரிமை..

தமிழ் சினிமாவில் பான் இந்திய அளவிலான படங்களும், சிறு பட்ஜெட் படங்களும் மாறி மாறி உருவாகின்றன. இதில் நல்ல கதைக்களம் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன. அதாவது, சிவ​கார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3 பிஎச்கே’ ஆகிய படங்களை தயாரித்த சாந்தி டாக்​கீஸ் நிறுவனம், அடுத்து விக்ரம் நடிக்​கும் படத்தை தயாரிக்​கிறது. இதையடுத்து, இந்​நிறுவனம் தயாரிக்​கும் படத்தை அறி​முக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்குகிறார். இதில் ஃபைனலி பரத் நாயகனாக நடிக்​கிறார். அவர் […]

பெண்கள் குறைதீர்ப்புக் குழு: திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை..

பேச்​சிலர், மகா​ராஜா, கிங்​ஸ்​டன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​த திவ்யபார​தி, தற்போது தெலுங்​கில் ‘கோட்’ என்ற படத்​தில் நடித்துள்​ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்​பிடிப்​பில், தன்னை பலமுறை அவர் அவமானப்​படுத்​தி​ய​தாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்​தார். நரேஷ் குப்​பி​லியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்​திருந்த திவ்யபார​தி, ‘பெண்களை ‘சிலகா’ (பறவை) போன்ற வார்த்தைகளால் அழைப்​பது நகைச்சுவை அல்ல. அது பெண் வெறுப்​பின் பிர​திபலிப்​பு​தான். இது​போல ஒரு முறை மட்​டுமல்ல, படப்​பிடிப்பிலும் அந்த இயக்குநர் பெண்​களை […]

விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்கில் வரவேற்பு பெறாத சில படங்கள் ஓடிடி.யில் வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நம்பிக்கையில் ஆர்யன் படக்குழு தற்போது எதிர்நோக்கியுள்ளது. பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றது. தற்போது வருகிற 28-ந்தேதி ‘ஆர்யன்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. க்ரைம் த்ரில்லர் படம் என்பதால், ஓடிடியில் நல்ல […]

‘ரஜினி-173’ பட இயக்குநர் நித்திலனா? ராம்குமாரா?

‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. அவ்வகையில், தற்போதைய நிலவரம் பார்ப்போம்.. ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை, கமல் தயாரிக்க, சுந்தர்.சி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. பின்னர், சில தினங்களில் இயக்குநர் பொறுப்பிலிருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து தொடர்கிறது. இப்படத்துக்காக தொடர்ந்து கதைகள் கேட்கும் சூழலில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தற்போது ரஜினியின்173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் […]

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசைவிழா: தமிழக ரசிகர்களுக்கு ஏற்பாடு?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலானது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியான இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பொதுவாக, விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் […]

ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பாடல்கள்: இசையமைப்பாளர் அப்டேட்ஸ்..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலியின் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி படம் குறித்து தெரிவிக்கையில், ‘ரசிகர்கள் பிரமாண்டத்தை […]