Browsing author

Suresh

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா; விஜய் மூவ் என்ன?: ரசிகர்கள் ஆர்வம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு வெளிவருவது தெரிந்ததே. 3 வருடங்களாக விஜய்யின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. கடைசியாக ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா 2023-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு வெளியான லியோ மற்றும் GOATஆகிய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. எனவே, 3 வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், தன் கடைசிப் பட இசை வெளியீட்டு விழா […]

ரஜினியின் ‘தலைவர்-173’ பட இயக்குநர்? ராம்குமாரின் வைரல் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் மாபெரும் வாய்ப்பை இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றிருப்பதாக தெரிகிறது. இவர்தான் ‘தலைவர்-173’ திரைப்படத்தின் இயக்குநர் என கூறப்படுகிறது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கி, வெற்றிப்படமாக கொடுத்து, தேசிய விருதையும் வென்றுள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதனைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் STR-49 திரைப்படத்திற்கு பூஜை நடைபெற்று, இயக்குவதற்கான பணிகளில் இருந்த ராம்குமாருக்கு ரஜினியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துப்போகவே ‘தலைவர்-173’ பட இயக்குநர் […]

ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்து, நடிகை சமந்தா பிரச்சாரம்..

பெண்மை புனிதமானது. பெண்ணியம் மகத்தானது. பெண் இல்லாமல் உலகில்லை என ஆன்றோரும் சான்றோரும் எடுத்தியன்றாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்வது மனிதகுலக் கேடு. என்று தரும் இந்த அவலம். பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்’ […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் இணைகிறார் சாய் பல்லவி?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்ததாக சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க, பூஜையும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஆனால், அடுத்தாண்டு கண்டிப்பாக இப்படம் துவங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ரஜினியை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரைவில் இதன் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இத்தகவலை ரஜினியும் கமலும் உறுதிப்படுத்த வேண்டும் […]

நடிகை சக்யுக்தா- கிரிக்கெட் வீரர் அனிருத்தா திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தாவுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யின் வாரிசு , காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், குறும்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். இந்சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் . பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தா சென்னை […]

சிம்புவை தொடர்ந்து, ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில், பிற மொழி பிரபலங்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாக பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன். முதல் பாகத்தில் நடித்த பலரும் 2-வது பாகத்தில் நடித்து வருகின்றனர். அவ்வகையில் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனைத்தொடர்ந்து எஸ்கே 24-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை கவனித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சில சிக்கல்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது SK24 திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு திடீரென […]

ஹீரோவாக ஒரு பக்கம், ‘கைதி-2’ இயக்கம் மறுபக்கம்: லோகேஷ் பிஸி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் இரத்தம் வழியும் முகத்துடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்துக்கு ‘DC’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஷுட்டிங் துவங்கி நடந்து வரும் நிலையில், தனது இயக்கத்தில் உருவாகும் 7-வது […]

எடிட் செய்து மீண்டும் ‘அஞ்சான்’ படம் வெளியீடு: லிங்குசாமி நம்பிக்கை..

சூர்யா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அவரது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவுடன், யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பரவலான ட்ரோல்களை இப்படம் சந்தித்தது. இந்நிலையில், ‘அஞ்சான்’ படம் தற்போது […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதியின் ‘ரோல்’

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சோஷியல் மீடியா பக்கத்தில், விஜய் சேதுபதி ‘அரசன்’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி எந்த மாதிரியான ரோலில் நடிக்கின்றார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, விஜய் சேதுபதி வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களில் நடித்துவிட்டார். இதைத்தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவிற்கு இணையான ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ‘வடசென்னை’ படத்தில் ‘ராஜன்’ ரோலில் விஜய் சேதுபதி நடிப்பதாக […]