Browsing author

Suresh

விஜயகாந்துக்கு நினைவஞ்சலி செலுத்த, விஜய் ஏன் வரவில்லை?: வைரலாகும் விமர்சனங்கள்..

கேப்டன் குரு பூஜைக்கு விஜய் வராததால், கடும் விமர்சனங்கள் பெருகி வருகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. கேப்டன் விஜயகாந்த் குரு பூஜைக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. முன்னதாக, விஜய்காந்த்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்தின் சகோதரர் சுதீஷ் என இருவரும் நேரில் சென்று விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கினர். இந்தச் சந்திப்பின்போது விஜய் வருவதாக உறுதி அளித்துள்ளார். இச்சூழலில், விஜய் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேரில் வரமுடியாத நடிகர்கள், […]

ராம் சரணுக்கு, ரசிகர்கள் 256 அடி உயர செம கட்டவுட்: இந்திய திரையுலகில் பரபரப்பு..

பிரபாஸின் ரசிகர்கள் செய்த சாதனையை, ராம் சரண் ரசிகர்கள் முறியடித்துள்ள நிகழ்வு குறித்து பார்ப்போம்.. ராஜமௌலி இயக்கிய RRR படத்திற்கு பிறகு, ராம் சரணின் திரைப்படம் கேம் சேஞ்சர்.3 வருடங்களுக்கு பின், ராம் சரண் நடித்த திரைப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அவ்வகையில், ஆந்திராவில் ராம் சரணுக்காக ரசிகர்கள் 256 அடி கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர். இதுவரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட்டவுட் வைத்ததே இல்லை. சுமார் […]

சூர்யா-விஜய் குறித்து இயக்குனர் பாலா பேச்சு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..

அலைகள் ஓய்ந்தாலும் சர்ச்சைகள் ஓய்வதில்லை. அது சரி, பழுத்த மரம்தானே கல்லடி படும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. பாலுமகேந்திரா திரைக்கூடத்திலிருந்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குநர் பாலா. தற்போது, இவர் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில், படத்தைப் பற்றியும்; முன்னதாக விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி பற்றியும் பாலா தெளிவுறுத்தியதாவது: ‘வணங்கான்’ படத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், படத்திலிருந்து சூர்யா […]

புத்தாண்டில் திருப்புமுனையாக, ஜெயம் ரவியும் அதர்வாவும் எண்ணியது ஈடேறுமோ?

எஸ்கே ஹீரோவாக நடிக்கும் படத்தில், இணைந்த இந்த இருவருக்கும் திருப்புமுனை ஏற்படுமா? என்ற தகவல் பார்ப்போம்.. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு இது 25-வது படமாகும். இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் இணைந்தது குறித்து அதர்வா, ‘பரதேசி படத்திலிருந்து சுதா கொங்கராவை தெரியும். நாங்கள் இருவரும் ரொம்ப குளோஸ் ஃப்ரண்ட். சேர்ந்து படம் பண்ணுவோம்’ என சொல்லியிருந்தார். […]

பக்திப் பரவசம்: கடவுளை பற்றி, ரஜினியிடம் ஸ்ருதிஹாசன் உரையாடல்.?

ஸ்ருதிஹாசனின் கடவுள் பக்தியை கண்டு, இணையவாசிகள் விடுத்துள்ள அன்புக் கோரிக்கையை பார்ப்போம்.. வாங்க.. அப்பா (கமல்) நாத்திகர். ஆனால், தான் கோயிலுக்குப் போனதைப் பற்றி ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியதாவது: ‘எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை அதிகம். ஆனா, அப்பாவுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததால், எங்களால் கோயிலுக்குப் போக முடியாமல் இருந்தது. அதனால், கள்ளத்தனமாக கோயிலுக்குப் போயிடுவேன். அடிக்கடி சர்ச்சுக்கும் போவேன். ஆனால், ரொம்ப நாளைக்கு இது அப்பாவுக்குத் தெரியாது. தாத்தா கூடப் போனாலும், அப்பாகிட்ட […]

‘பேபி ஜான்’ படத்தால், தயாரிப்பாளர் அட்லிக்கு லாபமா? நட்டமா?

ஒரு கோலிவுட் டைரக்டர், பாலிவுட்டில் புரொடியூசராக களம் இறங்கி ஆதாயம் பார்த்தாரா? என பார்ப்போம்.. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவந்த ‘பேபி ஜான்’ படம் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமான அட்லி, இப்படத்திற்கு செம புரோமோஷன் செய்தது தெரிந்ததே. ‘பேபி ஜான்’ படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, சல்மான்கானும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனால், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால், படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் […]

செம வைரலாய் ‘விடாமுயற்சி’ படப் பாடல்: ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு தற்போது, வரும் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன் ‘விடாமுயற்சி’ டீசரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி எங்கும் ஹிட்டடித்து வருகின்றது. ‘சவ்தீக’ என்ற செம துள்ளலான அந்த பாடலை ஆண்டனிதாசன் பாட, அனிருத் இசைமைத்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால், இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் செம கிளாஸாக […]

‘சச்சின்’ – ‘வாடிவாசல்’ ஷூட்டிங் வொர்க் குறித்து, கலைப்புலி எஸ்.தாணு அப்டேட்

தளபதி விஜய் நடித்த ‘சச்சின்’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படங்கள் குறித்து, வெளியான புதிய தகவல் பார்ப்போம்.. திறன்மிகு இயக்குனரான வெற்றிமாறன் ‘விடுதலை-2’ படம் திரையங்குகளில் ரிலீஸான நிலையில், விரைவில் ஓடிடி.யில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, ‘வாடிவாசல்’ படப்பணிகளில் சூர்யா இணைகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இச்சூழலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கலெக்‌ஷன் அள்ளிய நிலையில், […]

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்-2’ திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா? இதோ..

சீயான் நடிக்கும் வீர தீர சூரன் 2-ம் பாகத்தின் கதை குறித்துப் பார்ப்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ படத்தின் 2-ம் பாகத்தை அருண்குமார் இயக்க, எஸ். ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லராய் உருவாகிய இப்படத்தில், விக்ரம் காளி என்ற ரோலில் நடித்துள்ளார். அவரது மனைவியாக துஷாரா வருகின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் […]

நான் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தது: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச்

தமிழ் சினிமாவில், ‘பாட்ஷா’ திரைப்படம் செம எனர்ஜி மூவி என்பதை ரசிகர்கள் அனைவரும் அறிவர். தற்போது, இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாமலை, பாட்ஷா, வீரா, பாபா என பல படங்களை இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா திரைப்படங்கள் இன்றும் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன. இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து, ரஜினி கதை கேட்டிருக்கிறார். இது குறித்து சுரேஷ் கிருஷ்ணா […]