Browsing author

Suresh

‘ஃபயர்’ திரைப்படம் எப்படி?: இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்ட பதிவு

‘ஃபயர்’ திரைப்படம் குறித்து டி.ராஜேந்தர் தெரிவித்துள்ள தகவல் பார்ப்போம்.. ‘ஃபயர்’ திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி, பெண்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பெண்கள் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது. எந்த இடத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்களை காதலித்து ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என படம் பார்த்த பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் […]

எங்களது ரிலேஷன்ஷிப் தொடரும்: ஜி.வி.பிரகாஷ் பற்றி சைந்தவி

‘இல்லறத்தில் பிரிந்தாலும், இசையால் இணைந்திருக்கிறோம்’ என்கிறார் சைந்தவி. இது குறித்த இசைக்காதல் காண்போம்.. ஜி்.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் தம்பதியர் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கையில் சில விரிசல்கள் வர ஆரம்பித்தன. அதற்கு காரணம், ஜி்.வி. பிரகாஷ் நடிக்க வந்ததுதான் என பலர் கூறினர். அந்த விரிசல் மேற்கொண்டு பெரிதாகி இருவரும் பிரிந்து விட்டார்கள். இருப்பினும், ஜி.வி. பிரகாஷின் இசை கச்சேரியில் கலந்துகொண்டு சைந்தவியும் பாடினார். […]

சீமான் இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘காதல் ஒழிக’ படம் – வைரல் நினைவலைகள்

காதலர் தினத்தை முன்னிட்டு, பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள் பற்றிக் காண்போம்.. 25 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபன் நடிக்க கமிட் ஆகி, பின்னர் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்க திட்டமிடப்பட்டு, இளையராஜா இசையமைக்கவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவும் கமிட் ஆகி இருந்துள்ளார்கள். காதலர் தினத்தன்று பார்த்திபன் அந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளதால், இது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. மேலும் அந்த போஸ்டருடன், […]

விஜய் தேவரகொண்டாவின் ‘ரிஷி’ யார் தெரியுமா?: வைரலாகும் நிக்நேம்

மனசுக்கு பிடிச்சவங்களை நிக்நேம் வைத்து அழைப்பதுண்டு. அது லூசு, எருமை, செல்லம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த விஜய் தேவரகொண்டா சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு தரமான வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில், விஜய் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. […]

ஒரு காலத்தில் உன் காதலியாக இருந்தேன்: ஆண்ட்ரியா ஃபீலிங்ஸ், நெட்டிசன்ஸ் ஆறுதல்

ஆண்ட்ரியா நினைவலைகளில் இன்னமும் அனிருத்தா? என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்.. பாடகியும் நடிகையும் ஆன ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார். இருவரும் ஒன்றாக பல பார்ட்டிகளுக்கு செல்வது, தனிமையில் சந்தித்துக் கொள்வது என தங்களது காதலை வளர்த்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து போனார்கள். அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் 5 வயது வயது வித்தியாசம். அதாவது […]

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: முழு விவரம்

பட்டமரம் கல்லடி படாது. ஆனால், பழுத்த மரம் கல்லடி படும்தானே. இதில், சொல்லடி படுவது வேறு. இத்தகைய சூழலில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கட்சி தொடங்கிய பின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பாதுகாப்பு வகைகள் பற்றிப் பார்ப்போம்.. இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் […]

பணத்துக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?: வைரலாகும் பிரபல பாடகரின் கருத்து

திரிஷாவை சம்பந்தப்படுத்தி வைரலாகும் நிகழ்வு குறித்துப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லீ’ படத்திலும் திரிஷா நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக 45-வது படத்திலும், மோகன்லால் நடிப்பில் ‘ராம்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் திரிஷாவின் டுவிட்டர் சில தினங்களுக்கு முன்பு, கிரிப்டோ […]

காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிம்பு படத்தில், சின்ன அனிருத் மியூசிக்

‘சின்ன அனிருத்’ என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் பற்றிக் காண்போம்.. சிம்பு நடிப்பில் எஸ்.டி.ஆர் 49 படம் உருவாக உள்ளது. ராம்குமார் இயக்க, சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், சிம்பு கல்லூரி மாணவனாக வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க, சின்ன அனிருத் என கொண்டாடப்படும் சாய் அபயங்கர் எஸ்டிஆர்-49 படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர், பாடகர்களான திப்பு-ஹரிணி […]

அனுமதி பெறாமல் பாடல்கள் ஒலிபரப்பு வழக்கு: ஐகோர்ட்டில் இளையராஜா இன்று ஆஜர்..

சென்னை ஜகோர்ட்டில் ‘இசைஞானி’ இளையராஜா இன்று ஆஜர் ஆனார். இது பற்றிய விவரம் வருமாறு: இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை உரிமையை அவரின் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்களை தற்போது யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘லவ் மேரேஜ்’. இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, நிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் பற்றி சண்முக […]