Browsing author

Suresh

‘விகடன்’ இணையதளம் முடக்கப்பட்ட விவகாரம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்

‘விகடன்’ பத்திரிகையின் செய்தித்தளம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அப்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து சில முக்கிய விவகாரங்கள் பற்றிப் பேசினார். ஆனால், அப்போது அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், கைவிலங்கோடு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக டிரம்பிடம் மோடி பேசாமல் இருந்ததை கண்டிக்கும் விதமாக, விகடன் ப்ளஸ் என்கிற இணைய இதழில் பிரதமர் மோடி […]

நடிகர் யோகிபாபு, கார் விபத்தில் சிக்கினாரா?: நடந்தது என்ன?

யோகிபாபு விபத்துக்கு உள்ளானாரா? என்பது குறித்து உதயா தெளிவுபடுத்தி உள்ளார். இது பற்றிக் காண்போம்.. நடிகர் யோகிபாபு சென்ற கார், விபத்தில் சிக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விபத்தில் யோகிபாபுவுக்கு எந்தவித காயமுமின்றி அவர் தப்பியதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கவில்லை எனக்கூறி அவருடன் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், யோகிபாபுவும், தானும் […]

சினிமா துறையில் சம்பளத்தை பறிப்பதற்கு 2, 3 குரூப் இருக்கிறது: சிவகார்த்திகேயன் குற்றச்சாட்டு

‘சினிமாவில் சம்பளம் கிடைப்பது அரிதான விஷயம்’ என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இது பற்றிய அவரது ஆதங்கம் பார்ப்போம்.. ‘அமரன்’ திரைப்பட ரிலீஸுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு சம்பளம் கிடைத்துவிட்டது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘சம்பளத்தை சரியாக கொடுத்த கமல் ஹாசனுக்கு நன்றி. சரியாக சம்பளம் கிடைப்பது தமிழ் சினிமாவில் அரிதான விஷயம். தன் படங்களின் ரிலீஸுக்கு முந்தைய நாள், அன்பு அண்ணன் அலுவலகத்தில் இருப்பது வழக்கம். சம்பளத்தை சரியாக கொடுக்காமல் இருப்பதோடு […]

வெற்றி கிடைத்தால் பிறந்த ஊரையே மறந்து விடுவாயா?: ராஷ்மிகாவை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்

ராஷ்மிகா மந்தனா பேசிய கருத்துகளுக்காக, அதாவது எதிர்மறையான விஷயங்களுக்காக தற்போது டிரோல் செய்யப்படுகிறார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘சாவா’ பட விளம்பர நிகழ்ச்சியில் ராஷ்மிகா, ‘ தான் ஹைதராபாத்வாசி’ என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், நான் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நினைக்கிறேன். நன்றி’ என்று கூறிய வீடியோ கிளிப் தற்போது வைரலாகி வருகிறது. இதில், தான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று […]

ஏழரைச்சனி புடிக்கிறது ரொம்ப நல்லது: விஜய் சேதுபதி எனர்ஜி ஸ்பீச்

‘சினிமாவுல நான் கஷ்டப்பட்டு வரலை, கத்துக்கிட்டு வந்தேன்’ என்றார் விஜய் சேதுபதி. இது பற்றிய அவரது திரைவாழ்வியல் பார்ப்போம்.. விஜய் சேதுபதி தற்போது ‘ஏஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படமும் உள்ளது. இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் வருகிறார். மற்றும் பாண்டிராஜ் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இன்னும் சில படங்களும் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘உங்களுக்கு […]

பிரதீப்பின் வளர்ச்சியை, தனுஷ் மறைமுகமாக தடுக்கிறாரா?: கண்ணீர் நிகழ்வுகள்

குறுகிய காலத்திலேயே, தனது தனித்த திறமையால் பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து நிற்பவர். தற்போது இவரது மன அழுத்தத்தின் பின்னணி என்ன? இது குறித்த விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மூலமாக பிரதீப் ரங்கநாதன் இயக்குனராகவும் நடிகராகவும் பாராட்டப்பட்டார். இச்சூழலில், குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து, பல மடங்கு லாபத்தை ஈட்டிய நடிகராக தற்போது பிரதீப் பேசப்படுவது சிலருக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இச்சூழ்நிலையில் ‘டிராகன்’ இசை வெளியீட்டு விழாவில் பிரதீப் பேசும்போது, […]

விஜய் படத்திற்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் படம் ரீ ரிலீஸ்?

சச்சினுக்கு போட்டியாக ரஜினி முருகன் வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது ‘ரஜினி முருகன்’. இப்படத்தில், சிவகார்த்திக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியானார். படத்தில், சூரி- சிவகார்த்திகேயன் கூட்டணியில் நிகழும் காமெடி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும்,ராஜ்கிரண், சமுத்திரக்கனி, தீபா ராமானுஜம், மனோபாலா, உள்பட பலர் நடித்திருந்தனர். ரூ.22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. ‘ரஜினி முருகன்’ திரைப்படம் […]

தனுஷுக்கு ஓகே, சிம்புவுக்கு நோ, ஏன் இப்டி?: அனிருத்திற்கு ரசிகர்கள் கேள்வி

அனிருத்துக்கு, சிம்பு ரசிகர்கள் கேள்விக்கணை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சிம்பு பிறந்த நாளில் வெளியான, சிம்புவின் 49-வது படம், 50-வது படம் மற்றும் 51-வது படம் என்பது தெரிந்ததே. இந்த 3 படங்களில் 50-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 49-வது மற்றும் 51-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் 49-வது படம் மற்றும் 51-வது படத்தில் இசையமைக்க, சிம்பு தரப்பில் இருந்து அனிருத்தை அணுக, அவர் நோ சொல்லி அனுப்பியுள்ளார். […]

85 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’: பப்ளிக் ரிவ்யூ

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பார்த்த பொதுமக்கள் கவுண்டமணியை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என சந்தோஷித்து உள்ளனர். அவர் ஏன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடிக்காமல் விட்டுவிட்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 85 வயதில் ஹீரோவாக கவுண்டமணி நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த மக்கள் படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையும் […]

காதலர் தினத்தை முன்னிட்டு, திரிஷா வீட்டுக்குள் குடியேறிய புதியவர்

லவ்வர் டே அன்று தனது வீட்டுக்கு ‘ஒருவரை’ அழைத்து வந்துள்ளார் திரிஷா. இது பற்றிய விவரம் காண்போம்.. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதை ஈடு செய்யும் விதமாக ‘குட் பேட் அக்லி’ தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் திரிஷாதான் ஜோடி. ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ தற்போது வரையில் ரூ.125 கோடி வசூல் குவித்திருக்கிறது. அஜித் படங்களை தொடர்ந்து திரிஷா, தக் லைஃப், […]