Browsing author

Suresh

சிம்பு நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் கதை என்ன தெரியுமா?

‘டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘டிராகன்’ திரைப்படம் வெளிவாகி வரவேற்பை பெற்று வருகிறது. இச்சூழலில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிக்கையில், ‘டிராகன்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி திரும்ப நடக்கும். ‘எஸ்.டி.ஆர்-51’ படத்தை முடித்துவிட்டு, பிரதீப் தேதிகள் எல்லாம் பார்த்துவிட்டு பண்ண முடிவு செய்திருக்கிறோம். 200% அப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் தான் நடக்கும். எனது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் […]

நல்லதும் கெட்டதும் சேர்ந்த கேரக்டரில் வருகிறேன்: ‘தக் லைஃப்’ படம் பற்றி கமல்

‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார். ‘தக் லைப்’ திரைப்படத்தில் […]

நடிகர் ரவிமோகனை தொடர்ந்து, நடிகர் கௌதம் கார்த்திக் பெயர் மாற்றம்

கதை மாற்றமும் முக்கியம். பெயர் மாற்றமும் முக்கியம் என முடிவெடுத்துள்ளார் கௌதம் கார்த்திக். இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் ‘கடல்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே தோல்வி அடைந்ததால், அவருக்கு வெற்றி என்பது தாமதமாவது தொடர்கிறது. இந்நிலையில், ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்தார். அவரை கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பொதுவாக, சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. அண்மையில் […]

திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடி தமன்னா நடித்த ‘ஒடேலா-2’ பட டீசர் ரிலீஸ்

தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா-2’ திரைப்பட டீசர் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஒடேலா’ கிரைம் திரில்லர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தனர். பெரும்பாலும் வாரணாசியில் படமாக்கப்பட்டது. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் உள்ளன. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் பெற்று, டூப் போடாமலேயே நடித்திருக்கிறார் தமன்னா. தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், […]

நான் கேவலமா இருக்கேன்னு விமர்சனம் பண்ணாங்க: நடிகர் பிரதீப் கான்ஃபிடென்ட்

முள்ளு முள்ளாய் தெரியும் பலாப்பழம். ஆனால், அதனுள்ளே இருப்பதென்ன இனிக்கும் சுளையல்லவா. அதுபோல, மனிதர்களைக் கணிப்போம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கனாதன். இதனை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டிராகன்’ படம் ரிலீஸாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தையும் தயாரித்திருந்தது. இந்நிலையில், ‘லவ் டுடே’ பட […]

அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம்: இயக்குனர் ஷங்கர் வருத்தம்

‘எந்திரன்’ படம் தொடர்பாக எடுத்துள்ள அமலாக்கத்துறையின் நடிவடிக்கை பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ‘எந்திரன்’ திரைப்படம் தான் எழுதிய ஜுகிபா என்கிற கதையை திருடி எடுக்கப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜுகிபாவுக்கும் ‘எந்திரன்’ படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்ததால் அதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை காரணம் […]

நாளை ரிலீஸாகும் 10 படங்களில், சிம்பு பார்த்த படம்; அவர் பதிந்த தகவல்

நாளை 10 படங்கள் ரிலீஸாகிறது. இதில், எந்த படத்தை முதலில் பார்ப்பது என தேர்ந்தெடுப்பது அவரவர் ரசனையை பொறுத்தது. மேலும், இது தொடர்பாக வைரலாகி வரும் தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து பிரதீப் கவனிக்கப்படும் முக்கிய நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ உள்பட 10 படங்கள் நாளை ரிலீஸாகிறது. நாளை ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸாக […]

சூர்யா நடிக்கும் படத்தின் கதை மீது, இயக்குனர் சந்து பெரிய நம்பிக்கை

‘தண்டேல்’ பட இயக்குனர் சந்து, தனது அடுத்த படக்கதை பற்றிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘பேட்டைக்காரன்’ படத்திலும் நடித்து வருகிறார். பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ரோலெக்ஸ்’ படமும் வெயிட்டிங்கில் உள்ளது. இந்நிலையில், நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்த ‘தண்டேல்’ பட வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

22-ந்தேதி நடன நிகழ்ச்சி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்: பிரபுதேவா வாய்ஸ்

பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி வரும் 22-ந்தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ.வில் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அருண் ஈவண்ட்ஸ் சார்பில், பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி.22-ந்தேதி நடைபெறுகிறது. இது பிரபுதேவாவின் முதல் லைவ் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா, பரதம், ஃபோக், வெஸ்டர்ன் வகைகளின் கலவையை தனது நடனத்தில் வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து […]

வரலாற்றுப் படம் ‘சாவா’ கலெக்‌ஷன் மாஸ்: படக்குழுவினர் உற்சாகம்

ராஷ்மிகா நடித்துள்ள ‘சாவா’ திரைப்பட கலெக்‌ஷன் பற்றிப் பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில் லட்சுமண் உட்டேகர் இயக்கத்தில் விக்கி கெளஷல்-ராஷ்மிகா மந்தனா நடித்த வரலாற்றுப் படம் ‘சாவா’ பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் படத்தின் 6-வது நாள் வசூல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்கி கவுசல், சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். படத்தை, 130 கோடி பட்ஜெட்டில் தினேஷ் விஜன் தயாரித்துள்ளார். தற்போது இப்படம் 6-வது […]