Browsing author

Suresh

குறுகிய கால தயாரிப்பில், சிம்பு-சந்தானம் காம்போவில் புதிய படம்

சிம்பு நடிக்கவிருக்கும் 49-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். சந்தானம் நாயகனாக நடித்து வந்தாலும், அவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால், அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் சந்தானம். தற்போது சிம்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க […]

இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ […]

ஒன்றையணா உதவி செஞ்சுட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க: இயக்குனர் செல்வராகவன் வாய்ஸ்

‘யார்கிட்டேயும் சொல்லாதீங்க, உங்க வேலையை செய்யுங்க, அமைதியா இருங்க’ என கூறியுள்ளார் செல்வராகவன். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் மீது சர்ச்சைகள் உண்டு. ஆனால், அவரது அண்ணன் செல்வராகவன் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். நடிகை சோனியா அகர்வாலை விவாரத்து செய்த பின்னர், தன் துணை இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்து, 3 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன் மனதில் எழும் கருத்துகளை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். […]

சினிமா உலகில் ஆஸ்கர் விருது ஏன், எதற்கு, யாரால் கொடுக்கப்படுகிறது தெரியுமா?

உலக சினிமாவில் உயரிய கௌரவமாக போற்றப்படுகிறது ஆஸ்கர் விருது. இது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் காண்போம்.. * திரைத்துறையில் துறையில் சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வரப்படுகிறது. * ஆஸ்கர் சிலையின் உயரம் மட்டும்13.5 இன்ச் (34.3 செமீ). இதன் எடை 3.866 கிலோ. * முதல் முறையாக 1928-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஸர் […]

அஜித் படமும் தனுஷ் படமும் ஒரே தேதியில் ரிலீஸ்: வைரலாகும் இணையதள கலாட்டா

அஜித்-தனுஷ் படங்கள் ரிலீஸ் தொடர்பாக, இணையவெளியில் ரசிகர்கள் அரங்கேற்றும் ரகளை தொடர்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே தனுஷ் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும்’ இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன் […]

8-ந்தேதி சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து

இசைஞானியை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகுக்கு காலம் வழங்கிய கொடையாக வந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால், அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றிக்கொண்டார். காரணம், ஜுன் 3-ம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும், இளையராஜாவுக்கு பலரும் […]

சிகரெட் புகைத்த ஜோதிகா கேரக்டர் பற்றி, சிவகுமாரிடம் கேட்காதீர்கள்: நெட்சன்ஸ் கமென்ட்ஸ்

ரீல் வேற, ரியல் வேறதான். இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சை பெரிதாகி விடுகிறது. அப்படியொரு சர்ச்சையை காண்போம்.. சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா 2 குழந்தைக்கு தாயான பின்னர், தன் கணவரின் தயாரிப்பிலேயே ’36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஜோதிகாவின் இந்த முடிவில் சிவகுமாருக்கு விருப்பமில்லை என்றாலும், இந்த படத்திற்காக இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் மனதை மாற்றியது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார். பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ […]

விஜய்யின் மகன் பற்றி, நடிகர் சந்தீப் கிஷன் முத்திரைப் பேச்சு

உற்றார் மற்றோர் நிழலில் நில்லாமல், தனித்துவ அடையாளமாய் ஒருவர் பேசப்பட்டு வலம் வர வேண்டும். அதுதானே அவருக்கு பெருமை. அவ்வகையில், இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து முடித்து, குறும்படமும் இயக்கி பாராட்டு பெற்றார். அப்பாவைப் போல அவரும் நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல இயக்குனர் பாதையை தேர்ந்தெடுத்து களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், சினிமாவை விட்டு விஜய் சூழலில், […]

‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் நாளில், தெறிக்கவிட ரெடியாகும் தல யூனிஃபார்ம் அணி

அஜித் அணிந்த ஆடை வைரலாகி, தற்போது யூனிஃபார்ம் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தல’ அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து திரிஷா, மீண்டும் ஜோடியாகி உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது. இப்படத்தில், மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘குட் […]

ஜி.வி்.பிரகாஷை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடித்து தயாரிக்கும் பான் இந்திய படம்

துல்கர் சல்மான் தனது 40-வது படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் தியேட்டரில் சுமாரான வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ஓடிடி.யில் செம வரவேற்பு பெற்று, தற்போது முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, தென்னிந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த உற்சாகத்தில் துல்கர் சல்மான், அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் […]