Browsing author

Suresh

என்ன கொடுமை சார் இது: சமாதானம் பேச வந்த டைரக்டரை வெச்சு செஞ்ச டோனி ரசிகர்கள்

இடம் பொருள் ஏவல் அறிந்து வார்த்தை விடுதல் முக்கியம். அப்படி கவனமாய் பேசியும் களேபரமானால் என்ன சொல்வது. விஷயத்திற்கு வருவோம்.. ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது. அதுவும் பிட்ச் சரியில்லை, அதனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். பின்பு, வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றோம் பெரிய தோல்வி எல்லாம் கிடையாது என்றும் தெரிவித்தார். நேற்றிரவு நடந்த […]

சல்மான்கான், இஸ்லாமிய சட்டத்தை மதிக்க வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும்; சர்ச்சை நிகழ்வு

ஒரு முஸ்லிமான சல்மான்கான், மாற்று மதத்தையும் கடவுளையும் புரோமோட் செய்யும் விதமாக கடிகாரம் அணிந்தமைக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முஸ்லிம் மதகுரு கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள்… ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி அளித்த பேட்டியில், ‘சல்மான் கான் ஒரு பிரபலமான முஸ்லிம் முகமக இருக்கிறார். அவர் ராம் எடிஷன் கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். அந்தக் கடிகாரங்கள் ராமர் கோயில் மகிமையை பரப்ப வடிவமைக்கப்பட்டது. சல்மான்கான் அதை […]

தனது காரை பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு, விக்ரம் அன்புக்கட்டளை

விக்ரம் மற்றும் அவரது ரசிகர்கள் பற்றிய வைரல் நிகழ்வு காண்போம்.. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் திட்டமிட்டபடி 27ஆம் தேதி காலையில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும், படக்குழு நடத்திய பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர், முதல் காட்சி, 27-ம் தேதி மாலையில் திரையிடப்பட்டது. இந்நிலையில், தற்போது இணையத்தில் வேகமாக ஒரு நிகழ்வு பரவி வருகிறது. அதாவது, விக்ரம் தனது காரில் படத்தின் புரோமோஷனுக்காக ஹைவேயில் வேகமாக சென்றுகொண்டு உள்ளார். காரில் […]

‘தலைவி’ திரிஷாவுக்கு வந்த திடீர் காதல்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்

தலைவி திரிஷா காதலிக்கும் அந்த புதிய நபர் யார்?. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் திரிஷா ஜோடியாகியுள்ளார். மேலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைஃப், சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ சூர்யா-45 என திரிஷாவுக்கு பல படங்கள் உள்ளன. குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித்-திரிஷா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், […]

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து விஜய் கடும் விமர்சனம்

விஜய்யின் இன்றைய அரசியல் பேச்சு வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள்.. நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார். அரசியல் பேசும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க, பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார். தேர்தலை முன்னிட்டு இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து விஜய் பேசியதாவது : […]

ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு: நடிகை ஸ்ருதி கடும் சீற்றம்

தன்னை பற்றி வெளியான ஆபாச வீடியோ தொடர்பாக ஸ்ருதி நாராயணன் கடுங்கோபத்தில் குமுறிய தகவல்கள்.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்நிலையில், அவரது அந்தரங்க வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ப்ரைவேட்டுக்கு மாற்றிய ஸ்ருதி, யாருக்கும் பெரிதாக பதில் அளிக்காமல் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டால்கிராம் கணக்கை பப்ளிக்கிற்கு […]

ரகளையான காதல் கதையில், விஜய தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் ஜோடி

லவ் அன்ட் ஆக்சன் மிக்ஸிங்கில் உருவாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படம் மே மாதம் வெளியாகிறது. மேலும், ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கிரித்யன் ஆகியோரின் படங்களிலும் நடிக்க உள்ளார். இதில், ரவி கிரண் கோலாவுடன் இயக்கும் படத்திற்கு ‘ரவுடி ஜனார்தன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், […]

ஆர்யா-சந்தானம் கூட்டணியில் கலக்க வரும் காமெடி திரைப்படம்: பார்ட்2

இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குனர்களின் வரிசையில் ராஜேஷும் வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக சந்தானம்- ஆர்யா கூட்டணியின் நகைச்சுவை எனலாம். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்யா நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு […]

கவுதம் கார்த்திக்கின் காதல் மனைவி மஞ்சிமாவுக்கு விருது

விருது என்பது கலைஞர்களுக்கு தரும் கவுரவம், ஊக்குப்படுத்துதல். அவ்வகையில் மஞ்சிமா பெற்ற விருது காண்போம்.. மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கௌதம் […]

நடிகை சுஹாசினி இயக்கத்தில் இந்திரா-2 எப்போது?

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுஹாசினி இயக்கப்பணியில் ஈடுபட உள்ளாரா? இது பற்றிய தகவல் காண்போம்.. மணிரத்னம்-சுஹாசினி தம்பதியருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். அவரைப் பற்றி தெரிவிக்கையில், ‘எதிர்காலத்தில் இயக்குநராகவோ, நடிகராகவோ வர விரும்பினால் அது அவரின் விருப்பம். அதில் எங்களின் தலையீடு இருக்காது’ என தெரிவித்துள்ளனர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சுஹாசினி, நடிப்பை தாண்டி இவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த ‘இந்திரா’ என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறியவர். இந்நிலையில், தற்போது […]