Browsing author

Suresh

முதல் மணம் விவாகரத்து, 2-வது மணமோ சோகம், 3-வதாக காதல்: ஒரு நடிகையின் வாழ்க்கை..

‘எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்’ என்ற கண்ணதாசன் வரிகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்தானே. அவ்வகையில், பூவே உனக்காக பட நடிகை அஞ்சு அரவிந்த் பற்றி பார்போம்.. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து கூறியுள்ளார் அஞ்சு. அவர் கூறியதாவது, ‘முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர், எல்லாம் சரியாகிவிடும் என நம்பி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அந்தத் திருமணமும் சோகத்தில் முடிந்தது. வாழ்க்கை எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்தது. திருமணம் […]

வெங்கி அட்லூரி-சூர்யா; வெற்றிமாறன்-சூர்யா படங்களின் தகவல்கள்..

சூர்யா-46 மற்றும் வாடிவாசல் படங்களின் தகவல்கள் காண்போம்.. வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நடைபெற்றதும் தெரிந்ததே. படத்தில் சூர்யா கல்லூரி மாணவராக நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு, சூர்யா இரண்டு வித ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது சூர்யா நெகட்டிவ் ஷேடில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இவை அனைத்தும் வதந்திகளாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்தாலும், கேட்க சுவாரஸ்யமாக இருப்பதாக தீவிர ரசிகர்கள் கூறி வருகின்றனர். உண்மையாக […]

பகத்பாசில்-வடிவேலு மீண்டும் இணைந்த ‘மாரீசன்’ பட டீசர் இன்று வெளியீடு; கதை என்ன?

‘மாரீசன்’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாரீசன். இப்படம் வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் இணைந்த வடிவேலு-பகத்பாசில் காம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பற்றி வடிவேலு தெரிவிக்கையில், இது வித்தியாசமான ஒரு படம். குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். கண்டிப்பாக விருதுகள் கிடைக்கும்’ என நம்பிக்கையாக […]

கமல் மன்னிப்பு கேட்கவில்லை; விசாரணை 10-ந்தேதி ஒத்திவைப்பு..

‘மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு ஈகோ தடுக்கிறது’ என தெரிவித்துள்ள நீதிமன்ற விசாரணை காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷன் விழாவில் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து கன்னடம் வந்தது’ என பேசியது பெரும் சர்ச்சையானது. கமல்ஹாசனை ‘மன்னிப்பு’ கேட்க வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் ‘தக் லைஃப்’ வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய கமல்ஹாசன் மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம். […]

கமல் மீது கோர்ட் கடும் சாடல்: ‘தக் லைஃப்’ ரிலீஸ் தொடர்பாக சமாதான கடிதம்..

கர்நாடக வர்த்தக சபைக்கு, கமல்ஹாசன் எழுதியுள்ள அவசர கடிதம் காண்போம்.. தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது என கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையாக வெடித்தது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியிருந்தார். இதையடுத்து, தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று […]

‘தக் லைஃப்’ பட ரிலீஸ் விவகாரம்: இன்று நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்ன?

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் ரிலீஸாகுமா? என்பதை இன்று கோர்ட் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறும்போது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் உறுதியாக கூறுகிறார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது கருத்தை கண்டித்துள்ளனர். திரையரங்குகளும் […]

தீபிகா படுகோனே விலகிய விவகாரத்தில், சந்தீப் ரெட்டிக்கு மணிரத்னம் அறிவுறுத்தல்..

சந்தீப் ரெட்டி படத்திலிருந்து தீபிகா விலகியதற்கு இயக்குநர் மணிரத்னம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ பட ஹீரோயினியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோனே. அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி இணைந்துள்ளார். தீபிகா விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அது பரபரப்பானது. இதனையடுத்து, இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தீபிகாவை மறைமுகமாக சாடியிருந்தார். தனது எக்ஸ் தள பதிவில், ‘நான் ஒரு நடிகரிடம் […]

அனுஷ்கா நடித்த ஆக்‌ஷன் ஜானர் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நடிகைகளை பொறுத்தவரையில் 35 வயதை கடந்துவிட்டால், பெரும்பாலும் ஹீரோயின் வாய்ப்புகள் குறைவது இயல்பு என்பது தெரிந்ததே. அவ்வகையில், சமந்தா தனக்கேற்ற முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் வந்தால் நடிக்கிறார். வெப் சீரிஸிலும் ஆக்‌ஷனாக மிரட்டி வசீகரிக்கிறார். அதுபோல, அனுஷ்கா ஷெட்டியும் தற்போது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போதுதான் ‘காட்டி’ படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இப்படத்தில், அனுஷ்காவை […]

இது தவறான ஒப்பீடு: ‘முத்த மழை’ பாடல் சர்ச்சை குறித்து சின்மயி விளக்கம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படம் நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘முத்த மழை’ என்கிற பாடலை மேடையில் சின்மயி பாடினார். அந்த வீடியோ வைரலானது. தமிழில் இந்தப் பாடலை தீ பாடியுள்ள நிலையில், தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்ஷனில் சின்மயி […]

இந்த வாரம், தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பற்றிப் பார்க்கலாம்.. தக் லைஃப்: மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. பான் இந்தியா படமான இதில் சிம்பு, திரிஷா, நாசர், அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பேரன்பும் பெருங்கோபமும்: இயக்குனர் தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவப்பிரகாஷ் […]