Browsing author

Suresh

ஆர்த்தி குறித்து ரவிமோகன் பெருமிதம்: வைரலாகும் நிகழ்வு

ரவி மோகனும் ஆர்த்தியும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள். இச்சூழலில் ஆர்த்தி குறித்து ரவிமோகன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ரவிக்கும், ஆர்த்திக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு மகன்களில் ஆரவ் என்பவர் ரவியுடன் சேர்ந்து ‘டிக் டிக் டிக்’ படத்த்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தனது தோழி கெனிஷாவுடன் வருகை தந்திருந்தார். அதனைப் பார்த்த ஆர்த்தி, எமோஷனலாக அறிக்கையை வெளியிட்டிருந்தார். பிறகு, ரவியும் ஒரு அறிக்கை விட்டார். ரவி ஏற்கனவே […]

பேய்கள் பற்றிய பயத்தால் தூங்கவேயில்லை: நடிகை கஜோல் அனுபவம்

தமிழ் சினிமாவில் ‘மின்சாரக் கனவு’ படத்தில் கஜோல் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கஜோல் பாலிவுட்டில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மா’ படத்தில் நடித்துள்ளார். விஷால் பியூரியா இயக்கி இருக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது, கஜோலிடம் எப்போதாவது படப்பிடிப்பில் அமானுஷ்யத்தை அனுபவித்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது […]

நடிகர் ஸ்ரீ எழுதிய ‘மே ஐ கம் இன்’ நாவல்: நெட்டிசன்ஸ் வாழ்த்து

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’, மிஷ்கின் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. இவர், முன்பு இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஸ்ரீ நடித்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் […]

கர்நாடகாவில் தக் லைஃப்: கமல்ஹாசன் மகிழ்ச்சி

‘தக் லைஃப்’ பட புரமோஷனில் ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் என அறிவித்தனர். இதனையடுத்து, கமல் விளக்கம் அளித்து கடிதம் அளித்தபோதும் அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையே என நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இதனால், கர்நாடகாவில் ‘தக்லைஃப்’ திரைப்படத்தை திரையிடவில்லை என கமல் அறிவித்தார். இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தக் லைஃப் படத்தை திரையிடும்போது, பாதுகாப்பு […]

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ஹெச்.வினோத்?

சூப்பர் ஸ்டார் ரஜினியும் இயக்குனர் ஹெச்.வினோத்தும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால், விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது. நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்குப் பிறகு, யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது ரஜினி – ஹெச்.வினோத் இருவரும் சந்தித்த […]

இந்த வாரம், தியேட்டர்-ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்

இந்த வார இறுதியில் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் படங்கள் விவரம் பார்ப்போம்.. ஜூன் 20-ந்தேதி தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இதில் […]

மீண்டும் அஜித்-யுவன் கூட்டணி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அஜித்தின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளாரா? என பார்ப்போம்.. ‘தல’அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. தீனா படத்தில் துவங்கி வலிமை படம் வரை அஜித்தின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன். ஆனால், சமீபகாலமாக அஜித்தின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அஜித் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்தித்து இருப்பதால், மீண்டும் இவர்களது கூட்டணி இணையுமா ? என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அஜித்தை சந்தித்தது குறித்து […]

சமந்தாவும் திரிஷாவும்: இணையதள வாதம், வைரல்

நடிகை சமந்தா, தன் கழுத்தில் இருந்த YMC அதாவது ‘ஏ மாய சேசசாவே’ படத் தலைப்பு டாட்டூவை அண்மையில் நீக்கிவிட்டார். அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில் YMC டாட்டூவை காணோம். இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலிப்பதால் கடந்த கால நினைவுச் சின்னம் வேண்டாமென்று டாட்டூவை நீக்கிவிட்டார் போன்று என ரசிகர்கள் பேசினார்கள். ஆனால் சமந்தா அதை கண்டுகொள்ளவில்லை. ஏ மாய சேசாவே குறித்து சமந்தா கூறியதாவது, ‘அந்த படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட அனைத்து காட்சியும் இன்னும் அப்படியே […]

ராஜமவுலி இயக்கும் படத்திற்காக, ரூ.50 கோடியில் வாரணாசி செட்

இந்திய அளவில் கவனம் ஈர்த்த ராஜமவுலியின் அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. ‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். […]

நடிகர் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஆர்யா, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஆர்யா தற்போது ‘அனந்தன் காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. நடிப்பது மட்டுமின்றி ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ‘அமர காவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘ரெண்டகம்’, ‘கேப்டன்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட […]