Browsing author

Suresh

தளபதி விஜய்க்கு 51-வது பிறந்தநாள்: ரசிகர்கள்-திரைப் பிரபலங்கள் வாழ்த்து

தளபதி விஜய் இன்று ஜூன் 22-ந்தேதி தனது 5-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், அவரது கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் வாழ்த்து குறித்தும் காண்போம்.. நடிகர் ராஜு மோகன், விஜய் உடன் […]

தனுஷ் மற்றும் அமீர்கான் நடித்த படங்கள் கலெக்சன்

‘குபேரா’ மற்றும் ‘சிதாரே ஜமீன் பர்’ படங்களின் வசூல் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்துடன் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன மற்றுமொரு படம் சிதாரே ஜமீன் பர். இப்படத்தில், அமீர்கான் ஹீரோவா நடிக்க, ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். அமீர்கான் ஜோடியாக ஜெனிலியா இணைந்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்தைப் போல அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படமும் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. அமீர்கானுக்கு உதவியாக ஷாருக்கானும் இப்படத்தை புரமோட் செய்திருந்தார். […]

திரைப் பிரபலங்களுக்கு, ரவிமோகன்-கெனிஷா விருந்து; கொண்டாட்டம்

பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள ‘அன்றும் இன்றும்’ ஆல்பம் தொடர்பான தகவல்கள் காண்போம்.. நடிகர் ரவிமோகன் தன் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடன் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு கெனிஷாவும் அறிக்கை வாயிலாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ரவி மோகனும், கெனிஷாவும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

வடசென்னை-2, வாடிவாசல், மற்றும் சிம்புவுடன் கூட்டணி: வெற்றிமாறன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வலம் வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போதைய அவரது பிஸியான சூழலில் தெரிவிக்கையில், ‘கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம் பண்ணப்போறேன். அதை முடித்துக்கொண்டு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஒரு படம் பண்ணனும். தனுஷ் தான் அப்படத்தின் ஹீரோ. எனவே தனுஷ் -வேல்ஸ் மற்றும் என்னுடைய காம்போவில் அடுத்ததாக ஒரு படம் உருவாகவுள்ளது. சிம்பு படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை இயக்குகிறேன்’ என்றார். […]

அஜித்துக்கு வில்லனாக விக்ரம் பிரபு?: ஆதிக் ரவிச்சந்திரன் சொல்வாரா?

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக விக்ரம் பிரபு நடிக்கிறாரா? என்பது பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் சண்முகப் பிரியன் உருவாக்கியுள்ள படம் லவ் மேரேஜ். இப்படத்தில், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

தேவயானியின் அப்பாவித்தனம் பிடித்திருந்தது: இயக்குனர் சாய் கணேஷ் சுவாரஸ்ய தகவல்

இயக்குனர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 BHK படம் வரும் ஜூலை 4-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தெரிவிக்கையில், ‘இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும்போது, எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான். அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை. காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் […]

சென்னையில் இருக்க பயந்தேன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் ப்ளாஷ் பேக்

ரம்யாவின் ரம்மிய நினைவலைகள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் மறக்க முடியாதது. ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார். படையப்பா படத்தில் நடித்ததிலிருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது எனலாம். மேலும், ரம்யா கிருஷ்ணனை […]

ஆர்.ஜே.பாலாஜிக்கு, ‘கருப்பு’ சூர்யா வாழ்த்து: ரசிகர்கள் உற்சாகம்

ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி, அவர் இயக்கியுள்ள படத்தின் முக்கிய அப்டேட் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா-45’ படத்தில் சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு விதமான ரோலில் சூர்யா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், […]

தனுஷ் நடிப்பில் ‘குபேரா’ படம் பற்றி பப்ளிக் ரிவ்யூ

தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்தின் பப்ளிக் விமர்சனம் பற்றிப் பார்ப்போம்.. * ரசிகர் ஒருவர் தெரிவிக்கையில், ‘படத்தின் முதல் பாதியோடு ஒப்பிடும்போது இரண்டாம் பாதி படம் சூப்பராக உள்ளது. படம் முழுவதும் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலரும் நன்றாக நடித்துள்ளார்கள். படம் மூன்று மணி நேரம் ஓடினாலும் நன்றாக உள்ளது. தனுஷின் நடிப்பு தான் படமே’ என தெரிவித்துள்ளார். * மற்றொரு ரசிகர் கூறும்போது, ‘தனுஷ் […]

‘ஜனநாயகன்’ பட போஸ்டர் மற்றும் கிலிம்ஸ் வீடியோ: ரசிகர்கள் ஆர்வம்

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகிறது. இந்நிலையில், விஜய் பிறந்தநாள் இன்னும் ஓரிரு நாட்களில் வரவுள்ளது. எனவே, அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இன்று படக்குழு ஒரு முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. படத்திலிருந்து ஸ்பெஷலான போஸ்டர் வெளியாகுமா அல்லது கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா என ரசிகர்களை […]