Browsing author

Suresh

ரஜினியின் ‘கூலி’ பட சிங்கிள் பாடல் வெளியீடு அப்டேட்ஸ்

‘கூலி’ படத்தின் மியூஸிக் அப்டேட் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் 3 என்ற படத்தில் அறிமுகமாகி, ‘கொலைவெறி’ பாடலின் வாயிலாகவும் பிரபலமானவர் அனிருத். அதனைத் தொடர்ந்து, ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்காலிகமாக இசைத்துறையில் இருந்து விலகிய நிலையில், அனிருத் காட்டில் அடைமழை. செம பிஸி.! தற்போது, தொடர்ந்து ரஜினியின் கூலி, விஜய்யின் ஜனநாயகன் என ஓடிக் கொண்டிருக்கிறார். முன்னதாக வெளியான விஜய் நடித்த ‘கோட்’ படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் […]

எதற்கு கேட்க வேண்டும் மன்னிப்பு?: கமலை தொடர்ந்து மணிரத்னம்

தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ படத்திற்கு பிறகு, மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும், படத்தின் புரமோஷனில் கமல், தமிழில் வந்தது கன்னடம்’ என்ற பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி, கர்நாடாகவில் ரிலீஸ் ஆகவில்லை. போராட்டங்கள் சூழ்ந்தும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. பின்னர் நிகழ்ந்த நீதிமன்ற வழக்குகளும் தெரிந்ததே. இந்நிலையில், ‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் […]

பிரபலங்களின் வலைத்தளங்கள் ஹேக்-தீர்வு என்ன?: ஸ்ருதிஹாசன் டென்ஷன்

டிஜிட்டல் உலகில், ஏன் இந்த விளையாட்டு? இதற்கு முற்றுப்புள்ளி எப்போது? என்ற தகவல்கள் பார்ப்போம்.. கமல்ஹாசனின் இரு மகள்களில் ஸ்ருதிஹாசன் காதல், பிரிவு, பேச்சு என்பதெல்லாம் வரும் தகவல்கள் ரீதியாக தெரிந்ததே. ஸ்ருதி, தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘கூலி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தனது டென்ஷனை வெளிப்படுத்தி உள்ளார். எவ்வாறெனில், ‘என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். […]

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்புவின் 50-வது படம் அப்டேட்ஸ்

சிம்புவின் 50-வது படம் குறித்து வெளியான தகவல்கள் காண்போம்.. தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை சிம்பு நடிப்பில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் சிம்பு. இதனால் ரசிகர்கள் இன்பதிர்சி அடைந்தனர். அவர்களுக்கு மேலும் ஆச்சரியம், அளிக்கும் விதமாக, சிம்புவின் 50-வது படத்தை வெங்கட் பிரபு […]

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது: திரையுலகில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் ‘ரோஜா கூட்டம்’ படம் மூலமாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகி தொடர்ந்தார். தற்போது சினிமா பிஸியில் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீ காந்த் மீது போதைப்பொருள் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அவர் 40 முறை போதைப் பொருள் வாங்கியது தெரிய வந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் குமார் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் […]

‘கண்ணப்பா’ படம் குறித்து, சரத்குமார் விமர்சனம்

சிவ பக்தர் ‘கண்ணப்பா’ வாழ்வியல் திரைப்படம் பற்றி சரத்குமார் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரிட்டீ முகுந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது: ‘கண்ணப்பா’ படம், […]

எனக்கு பேரழிவே ரஜினியுடன் நடித்த திரைப்படம்தான்: மனிஷா கொய்ராலா அதிரடி

ஸ்லிம் உடல்வாகுடன் சிலிர்ப்பான நடிப்பில் கவர்ந்தவர் மனீஷா கொய்ராலா. பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த ‘பாபா’ படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளது தற்போது பரபரப்பாக தெறிக்கிறது. ‘நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது […]

ஷகிலாவிடம் கிரண் பேசிய பேச்சு; வைரல்

‘பிக் பாஸ் புகழ்’ நடிகை வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ படம், ஜூலை 4-ந்தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கிரண் இணைந்துள்ளார். தற்போது, கிரணுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் இன்ஷ்டா பக்கத்தில் கவர்ச்சி வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இது ஆபாசமாக மாறி பேசுபொருளாகி விடுவதால், பல ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். […]

வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்துவுக்கு அபராதம்

திரையில் சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்; தற்போது சிந்திக்கவும் வைத்துள்ளார்கள். அதாவது, சிங்கமுத்துவுக்கு எதிராக, வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட […]

ரஜினியை தொடர்ந்து, அஜித்துடன் இணைகிறார் மோகன்லால்

‘தல’ அஜித்தின் அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆனால், அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. முதலில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில், அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் […]