Browsing author

Suresh

ரவிமோகன் பற்றி, சித்தார்த் தெரிவித்த தகவல்..

நடிகர் சித்தார்த் 3 BHK படத்தில் ஹீரோவா நடித்திருக்கிறார். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ‘சித்தார்த் நல்ல கதைகளையே தேர்வு செய்வார். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். இப்படம் பாலுமகேந்திராவின் ‘வீடு’ படம் போல பேசும்படி அமையும்’ என்றார். இதனைத் தொடர்ந்து சித்தார்த் பேசுகையில், எடிட்டர் மோகன் வீட்டில் ரவி […]

எனது குருட்டு நம்பிக்கை நிறைவேறியது: பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி..

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் 100- வது நாள் விழா நடைபெற்றது. விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, ‘இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். ‘லவ் டுடே’ படத்தில் […]

சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?

இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும். மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தவர்கள் மாலை வரை பேசியிருக்கிறார்கள். இதை தெரிவித்ததே சமந்தா தான். முன்னதாக ‘பேபி ஜான்’ பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் […]

வெங்கி அட்லுரி இயக்கும் ‘சூர்யா-46’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

சூர்யா 46’ படத்தின் கதைக்களம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவுற்றது. தற்போது சூர்யா – ஜோதிகா இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் திரும்பியவுடன் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனிடையே ‘சூர்யா 46’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவிக்கையில், ‘முதலில் ஒருவருடைய […]

சிவகார்த்திகேயன் மன்னிக்கவும்: அமீர்கான் ஓபன் டாக்..

அமீர்கான் நடித்து வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் நடிகர் தேர்வு பற்றி குறிப்பிடுகையில், ‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்தேன். சிறிது காலம் நடிப்பிலிருந்து விலக விரும்பினேன். ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் தயாரிப்பாளராகவே தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாவை அணுகினேன். பிரசன்னா ஆரம்பத்தில் ஏமாற்றமடைந்தார். ஆனால், நான் ஒரு தயாரிப்பாளராக தொடர்கிறேன் என்றேன். இந்தப் படம் முதலில் இருமொழிப் படமாக, இந்தி மற்றும் தமிழ் […]

டாஸ்மாக்கில் விற்பது சத்து டானிக்கா?: நடிகர் ரஞ்சித் கேள்வி..

கோலிவுட்டில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரம் பரபரப்பாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். மேலும் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் ரஞ்சித் தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் தெரிவிக்கையில், ‘இந்த விஷயத்தில் நடிகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் உடனுக்குடன் வெளியே தெரிகிறது. அது உண்மையில் வருத்தம் தான். இதை வாங்கி பயன்படுத்தியவர்கள் மீது இருக்கும் வருத்தத்தை […]

தீவு ஒன்றில், பிகினி டிரெஸ்ஸில் பாடகி கெனிஷா: வைரலாகும் நிகழ்வு..

நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் இணைந்த நிகழ்வு தெரிந்ததே. இந்நிலையில் ‘அன்றும் இன்றும்’ என ஒரு சிங்கிள் பாடலை இசையமைத்து கெனிஷா பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் அவருக்கு எதிர்காலம் உண்டு எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, கெனிஷா குறித்து பேசிய ரவி, ‘அவர் எனது வாழ்க்கையின் ஒளி’ என தெரிவித்திருந்தார். மேலும், ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரைத்துறையினருக்கு பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மாதவன், சுதா கொங்கரா, தெருக்குரல் […]

சொர்க்கத்தில் இன்னொரு நாள், நாம் இருவரும்’ – அழகிய தீவிலிருந்து ஜோதிகா குஷி..

சூர்யா-ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது இந்த நட்சத்திர ஜோடி பிஸி வாழ்க்கையில் இருந்து சற்று விலகி ரிலாக்ஸாக விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். அதாவது, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான சீஷெல்ஸில் ஓய்வெடுக்க சூர்யாவும், ஜோதிகாவும் சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் ஒரு அழகான வீடியோ ஆன்லைனில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை அவர்களுக்கு ஓய்வெடுக்கவும், பரபரப்பான பிஸி வேலையில் இருந்து […]

கமல்ஹாசனுக்கு, பவன் கல்யாண் வாழ்த்து..

‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கல்கி படத்தின் 2-ம் பாகத்திற்கும் கமல்ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசனை ஆஸ்கர் தேர்வுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்துள்ளது ஆஸ்கர் நிறுவனம். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திரா மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில், ‘2025-ம் ஆண்டுக்கான […]

சிம்புவும் அஷ்வத் மாரிமுத்துவும் இணையும் படம் எப்போது?

மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் சிம்பு தனக்கு கிடைத்த ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சிம்பு தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் எனவும், இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில், மிகப் பெரிய வெற்றி பெற்று ரஜினியின் பாராட்டும் பெற்ற படம் டிராகன். இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் […]