Browsing author

Suresh Kandasamy

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீலீலா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகை படத்தின் நட்சத்திரப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். முன்னணி கலைஞர்களின் கூட்டணியில், பிரம்மாண்டமான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் இப்படம் உருவாகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் […]

ராவடி படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பேசில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ராவடி’ (Raawadi). இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., […]

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ – படத்தின் சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்த படக்குழுவினர்

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe). இப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் கதைக்களம், உருவாக்கம், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் தங்களது கதாபாத்திரங்கள் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான […]

“அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே” படத்தின் டாக்டர் டூமின் புதிய போஸ்டர் வெளியீடு

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) படத்தின் வெளியீட்டிற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, மார்வெல் ஸ்டுடியோஸ் படத்தின் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர்களில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள், விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் பிரமிக்க […]

புற்றுநோயாளிகளுக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் காரணமாக முடி உதிர்வைச் சந்திப்பவர்களுக்கு உதவும் நோக்கில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் பிரம்மாண்ட சாதனை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது பாட்டியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, […]

ஷாருக்கானின் கிங் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கிங் (KING)’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தூ மில் ஜாயே (Tu Mil Jaaye)’ பாடலை வெளியிட்டுள்ளார். காதல், அதிரடி மற்றும் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் எனப் பல அம்சங்கள் கலந்த இந்தப் பாடலில், ஷாருக்கானுடன் தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர்களான அர்ஜித் சிங் மற்றும் எட் ஷீரன் ஆகியோரின் இசைப் பங்களிப்பும் பாடலுக்கு கூடுதல் சிறப்பைச் […]

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெற்றிக்காக கோயிலில் சிறப்பு பூஜை

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி […]