அமிதாப்பச்சனின் ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சி: பரிசை வெல்ல ரசிகர்கள் ஆர்வம்

க்ரோர்பதி நிகழ்ச்சியில் மீண்டும் அமிதாப் தொகுப்பாளராக இணைகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்..
பாலிவுட்டில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா க்ரோர்பதி’ 17-ஆவது சீசனில் கலந்து கொள்வதற்கான ரெஜிஸ்டேஷன் ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
இத்தகவலை, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் உறுதி செய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக மாறவுள்ளார். ரசிகர்கள் தங்களது திறமையை நிரூபித்து பெரிய பரிசை வெல்ல தயாராகி வருகிறார்கள்.
கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி 17 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சி துவங்கும் தேதி வெளியாகவில்லை.
கோன் பனேகா க்ரோர்பதி 17-க்கு ஏப்ரல் 14, 2025 முதல் பார்வையாளர்கள் பதிவு செய்யலாம். முதல் கேள்வி இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும். சோனி லிவ் ஆப் அல்லது வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம்.
கோன் பனேகா க்ரோர்பதி 17 புதிய மாற்றங்கள் மற்றும் அற்புதமான புதிய அம்சங்களுடன் வர உள்ளது. ரசிகர்கள் புதிய சவால்களை எதிர்கொண்டு, பெரிய தொகையை சம்பாதிக்க ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். பதிவு செய்து பரிசை வெல்லவும் தயாராகி வருகின்றனர்.