‘அமரன்’ படம் அசத்தலான சாதனை: சிவகார்த்திகேயன் செம குஷி..
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது போல நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த புதிய முடிவு, தற்போது நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இது குறித்த விவரம் காண்போம்.. வாங்க..
சிவகார்த்திகேயன் நகைச்சுவை கலந்த கதைகளில் இருந்து விலகி, புதிய பரிமாணத்துடன் கூடிய கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில், கமல் தயாரிப்பில் தற்போது ‘அமரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். முதல் முறையாக ராணுவ வீரராக அதுவும் முழுக்க முழுக்க சீரியஸான படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
எனவே, இப்படம் சிவகார்த்திகேயனை முற்றிலும் புதுமையாக காட்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. குறிப்பாக மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.
எனவே, சிவகார்த்திகேயன் தன்னை டோட்டலாக மாற்றி இப்படத்தில் முகுந்த் வரதராஜனாகவே மாறி நடித்து, தன் கடின உழைப்பையும் கொடுத்துள்ளார். எனவே, இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என தெரிகின்றது.
இந்நிலையில், அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. அதற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
மேலும், சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தை பாராட்டி பேசியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதுபோன்று, அனைத்துமே அமரன் படத்தை பொறுத்தவரை பாசிட்டிவாக இருந்து வருகின்றது. எனவே கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக சிவகார்த்திகேயனுக்கு அமையும் என நம்பப்படுகின்றது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, இப்படத்தின் கேரளா ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது.
சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்திலேயே அதிக தொகைக்கு விலைபோன படம் என்ற பெருமையை அமரன் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு கேரளாவிலும் மிகப்பெரிய மார்க்கெட் உண்டாகும் என கோலிவுட் வட்டாரம் கணித்திருக்கிறது.
பார்ப்போம், தீபாவளி அன்று வெடிக்கப் போகும் சிவாவின் துப்பாக்கி சத்தம் எப்படி தெறிக்கிறது என..!
