சிம்பு பட நடிகைக்கு, கல்யாணமான நடிகருடன் திடீர் திருமணமா?: வைரலாகும் நிகழ்வு..

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதா? இல்லை, ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா? என்றால்.. இருமனமும் ஒருமனமாகும் நிலையில் நிச்சயிக்கப்படுகிறது எனலாம். ஆனால், நடிகை கல்யாணிக்கு நேர்ந்த நிகழ்வே வேறு. அந்த கதையை பார்ப்போமா..வாங்க..
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன்- நடிகை லிசி தம்பதியரின் மகள் தான் தான் கல்யாணி பிரியதர்ஷன்.
இவர், தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு மற்றும் ஹீரோ படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். இவருடைய திருமணம் பற்றிய பேச்சுதான் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..
கல்யாணி பிரியதர்ஷனும், மலையாள சீரியல் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரனும் மணக்கோலத்தில் மாலையை மாற்றிக் கொண்ட வீடியோ இணையத்தில் படு வைரல் ஆனது. இதைப்பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போயினர்.
ஏனெனில், ஸ்ரீராம் ராமச்சந்திரன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அப்படி இருக்கையில் அவரை ஏன் கல்யாணி திருமணம் செய்துகொண்டார் என்கிற குழப்பம் நிலவி வந்தது.
அந்தக் குழப்பத்துக்கு தற்போது விடை கிடைத்து இருக்கிறது.
கல்யாணி பிரியதர்ஷனும் ஸ்ரீராம் ராமச்சந்திரனும் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த விளம்பர பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாம். அதை தான் அனைவரும் அது உண்மையிலேயே நடைபெற்ற திருமணம் என நம்பிவிட்டனர்.
இதில், ஹைலைட் என்னவென்றால் இந்த வீடியோவை பார்த்த பலரும் கல்யாணிக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
இத்தனை குழப்பத்திற்கும் காரணம் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரன் தான். அவர் தான் இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதனால் தான் ரசிகர்கள் சற்று குழம்பிப்போயினர். கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் ஜீனி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியிருக்க, அடுத்ததாக ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவிக்கும் கல்யாணிக்கும் காதல் என கதை கட்டிவிட்டு, அது திருமணம் வரை கொண்டுபோய் விட்டாலும் வைரலாகும் தான். நெட்டிசன்ஸ் ஜாக்கிரதை.!
