
அமலா பாலின் இரண்டாவது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் உடன் இணைந்து தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யுடன் காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதைத் தொடர்ந்து சிங்கிளாக வாழ்ந்து வந்த அமலாபால் படங்களிலும் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வந்தார். இவரது பிறந்தநாளுக்கு தன்னுடைய புதிய காதலரை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய காதலருடன் அமலா பாலுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதோ பாருங்க