குழந்தை பிறந்த இரண்டு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள இப்படியான ஆலியா மானசா செய்த செயலால் ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.

Alya Manasa in Water Ride Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து மீண்டும் ராஜா ராணி சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆன காரணத்தினால் சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். பிறகு இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்களாக நிலையில் ஆலியா மானசா குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அங்கு வாட்டர் ஐடி உற்சாகமாக ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய இதனைப் பார்த்த ரசிகர்கள் பச்சை உடம்புக்காரி இப்படி பண்ணலாமா? உடம்பைப் பார்த்துக்கோங்க என பதறிப்போய் கமெண்ட் அடித்துள்ளனர்.

அதேசமயம் ரசிகர்கள் பலர் நல்ல ஜாலியா என்ஜாய் பண்ணுங்க எனவும் கமெண்ட் கொடுத்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.