Ajith's name in Nerkonda Paarvai, Shraddha Srinath | Vidya Balan, Yuvan Shankar Raja, Nirav Shah, H. Vinoth, Boney Kapoor, Thala
Ajith's name in Nerkonda Paarvai

Ajith’s name in Nerkonda Paarvai

இப்படத்தில் அஜித்தின் பெயர் நீதி தேவன் என்பது தான் அது படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற பெயராகவே இது இருக்கும்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த துறையின் வளர்ச்சிக்காக அஜித் பாடுபடுவார் – தந்தி டிவி பாண்டே சொன்ன சூப்பர் தகவல்!

இப்படம் குறித்து வெளியாகும் சின்னத் தகவல் கூட சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிடைத்திருக்கும் ஒரு தகவல் அஜித் ரசிகர்களை பெரிதும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

அது என்னவென்றால் இப்படத்தில் அஜித்தின் பெயர் நீதி தேவன் என்பது தான் அது படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற பெயராகவே இது இருக்கும் ஆனால் ஒரு பக்கம் இது வெறும் யூகம் என்றும் சொல்லப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் படம் வெளியானால்தான் உண்மை தெரியவரும்.