அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!
அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ajith upcoming movie director update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 200 கோடியை நெருங்க உள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
ஏற்கனவே சிறுத்தை சிவா, விஷ்ணு வரதன் ,கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குனர்கள் இயக்குவார்கள் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஆதிரவிச்சந்திரன் மீண்டு அஜித்துடன் இணைந்து பணியாற்ற போவதாக சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith upcoming movie director update