Ajith Love Before Shalini
Ajith Love Before Shalini

ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பாகவே பிரபல நடிகை ஒருவரின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார் அஜித்.

Ajith Love Before Shalini : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். கடுமையான உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் இன்று சினிமாவில் உச்சம் பெற்றுள்ள இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எங்களுக்கு குழந்தை பிறந்துடுச்சு.. மகிழ்ச்சியுடன் அறிவித்த சஞ்சீவ், இதுவும் ஆலியா சொன்ன மாதிரியே நடந்து போச்சு – என்ன குழந்தை தெரியுமா?

ஆனால் அஜித் ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பாக நடிகை ஹீரா என்பவரை காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. இது பெரும்பாலும் பலருக்கு தெரிந்த ஒன்றாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க தற்போது இன்னொரு தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

ஹீராவிற்கு முன்பாக அஜித் இன்னொரு நடிகையை காதலித்ததாகவும் அந்த நடிகையை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

பானுமதி என்ற படத்தில் நடித்த நடிகை சுவாதியை தான் அஜித் காதலித்ததாகவும் அவரைப் பெண் கேட்டு வீட்டிற்குச் செல்ல அவர் அம்மா தற்போது அவள் நடிக்க வேண்டும். திருமணம் பற்றி யோசிக்கவில்லை எனக் கூறி அனுப்பி விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

மாஸ் அணிந்தபடி மருத்துவமனையில் ஷாலினியுடன் தல அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை இருந்தாலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பலருக்கும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.