Ajith With Shalini in Hospital
Ajith With Shalini in Hospital

மாஸ்க் அணிந்த படி மருத்துவமனையில் நடிகை ஷாலினியுடன் தல அஜித் சென்ற இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Ajith With Shalini in Hospital : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் மாஸ் காட்டிய சமீரா ரெட்டியின் சுட்டி குழந்தை – வைரலாகும் வீடியோ

அதுமட்டுமல்லாமல் அஜித்தும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மாஸ்க் அணிந்த படி மருத்துவமனை ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அஜித் எதற்காக தன்னுடைய மனைவியுடன் இந்த மருத்துவமனைக்கு வந்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் மீண்டும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும். படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.