கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான ஸ்டார் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் கலந்து வரும் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கவின். இவரது நடிப்பில் இன்று ஸ்டார் திரைப்படம் உலக முழுவதும் வெளியாகியுள்ளது.
ட்ரைலர் மூலம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் என்று பார்க்கலாம் வாங்க
படத்தின் கதைக்களம் :
ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையில் ஜாலியாக சுற்றித் திரியும் கவினுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்து காரணமாக முகத்தில் காயம் ஏற்பட நடிகராகும் கனவு சுக்குநூறாக உடைகிறது. அவருடைய அம்மாவுக்கு நடிகராக பணமும் பொறுமையும் தேவை என்பதால் இதில் ஈடுபாடு இல்லை. தன்னால் சாதிக்க முடியாததை தன் மகனை வைத்து சாதிக்க வேண்டும் என ஆசை கொள்கிறார் நடிகர் லால்.
இந்த நிலையில் குடும்பத்துக்காக வேலைக்கு செல்லும் கவின் கடைசியில் ஹீரோவானாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல் :
கவின் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்து நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார் கவின்.
எதார்த்தமான நடிப்பால் நம்மை கட்டி போடுகிறார் அப்பா லால்.
படத்தில் நடித்துள்ள மற்றவர்களின் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்து பலம் செய்துள்ளனர்.
இயக்குனர் இளம் சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்திலிருந்து ஹீரோவாக வேண்டும் ஆசைப்படுபவர்களின் நிலைமை அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு உயிர் கொடுக்கிறது.
மொத்தத்தில் ஸ்டார் உங்களின் மனம் கவரும்.