அஜித் நடிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தை நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்புகள் துபாயில் அபுதாபியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

இப்படியான நிலையில் நானூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் அஜித் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வலைப்பேச்சு அந்தணன் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது அஜித்தை வைத்து ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணுவரதன் ராஜராஜ சோழன் தஞ்சை கோவிலை கட்டியதை மையமாக வைத்து ஒரு வரலாற்று படத்தை இயக்க இருந்தார். இதில் அஜித்தை ஹீரோவாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது.

அதன் பிறகு விஷ்ணுவர்தன் பாலிவுட் பிஸியாக அஜித்தும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்ததால் இந்த படம் தொடங்காமல் இருந்தது. தற்போது இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடப்பதாக இந்த படம் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.