Ajith Helps to Gym Master
Ajith Helps to Gym Master

ஜிம் மாஸ்டருக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவியுள்ளார் அஜித்.

Ajith Helps to Gym Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாத இவர்களுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்து உள்ளார்.

பல கஷ்டங்களை தாண்டி இவர் இந்த இடத்தை பிடித்து இருப்பதால் இன்று வரை கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு சத்தமில்லாமல் உதவி கொண்டு தான் இருக்கிறார்.

அஜித் செய்யும் உதவிகளை சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் மட்டுமே வெளியே தெரியும். அந்த வகையில் தற்போது அவர் ஜிம் மாஸ்டர் ஒருவருக்கு செய்த உதவி தெரியவந்துள்ளது.

சிம்பு மாதிரி ஒரு ஆள பார்க்கவே முடியாது.. STR பற்றி விஷ்ணு விஷால் அதிரடி பதிவு.!

தன்னை ட்ரெயின் செய்த ஜிம் மாஸ்டர் தன்னுடைய அம்மாவின் நகைகளை அடமானம் வைத்து வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த தகவலை எப்படியோ அறிந்து கொண்ட அஜித் உடனே ஜிம் மாஸ்டரை அழைத்து ரூபாய் 5 லட்சம் கொடுத்து உடனே நகையை மீட்டு அம்மாவிடம் கொடு என கூறியுள்ளார்.

மேலும் நீ நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவாய் எனவும் அவரை வாழ்த்தியுள்ளார். இதனை அந்த ஜிம் மாஸ்டர் பேட்டி ஒன்றில் கூற அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/HariMurug/status/1252595663952584706?s=19