Vishnu Vishal Comments on STR
Vishnu Vishal Comments on STR

நடிகர் சிம்புவை மாதிரி ஒருவரை பார்க்க முடியாது என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Vishnu Vishal Comments on STR : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். சமீபகாலமாக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் விஷ்ணு விஷால் சிம்புவுடனான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அவரைப்பற்றி பேசி உள்ளார்.

இளம் பெண்களுக்கு இவர் மேல கிரஷ்.. ஆனால் இந்த ஹீரோவுக்கு ராஷ்மிகா மந்தனா மேல தான் கிரிஷ் – யார் அந்த தமிழ் நடிகர் தெரியுமா?

என்னுடைய முதல் படத்திற்கு பிறகு சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் சிம்பு. இதுவரை எங்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல மதிப்புண்டு.

சிம்புவை போல எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள் சினிமாவில் மிகவும் குறைவு.‌ அவர் திறமையான நடிகர்.

ராட்சசன் பட சூட்டிங்கின்போது அவரால் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார்.