Ajith Activities in Lockdown

இந்த கொரோனா லாக் டவுனில் தல அஜித் செய்துள்ள புதிய முயற்சிகள் குறித்து தெரிய வந்துள்ளது.

Ajith Activities in Lockdown : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் படப்பிடிப்பு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததும் ஷூட்டிங் தொடங்கி விடலாம் என அஜித் கூறியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

அஜித்துக்கு தம்பியான இளம் நடிகர்.. சூடு பறக்கும் வலிமை அப்டேட் – அது யார் தெரியுமா??(Opens in a new browser tab)

இந்த நிலையில் தற்போது தல அஜித் இந்த நாட்களில் வீட்டில் செய்துள்ள சில வேலைகள் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது அஜித் வீட்டில் ஒரு பூந்தோட்டத்தை அமைத்துள்ளார். இந்த நாட்களில் அந்த பூந்தோட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் உடலுக்கு நன்மை தரும் மூலிகை செடிகளை வளர்ப்பதிலும் அஜித் இந்த லாக் டவுனில் ஆர்வத்தை அதிகப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.