ஐஸ்வர்யா ராய் கார் விபத்து: நிகழ்ந்தது என்ன?

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து பற்றி வெளியான தகவல்கள்..

ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான செய்தி இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. அதிக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் இந்த விபத்தை கேலி செய்து போஸ்ட் செய்து வருகிறார்கள். உண்மையில், விரேந்தர் சாவ்லா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில்..

ஐஸ்வர்யா ராயின் சொகுசு கார் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னால் ஒரு பேருந்து காணப்படுகிறது. வீடியோவின் தலைப்பில், அவர், ‘எதிர்பாராத விபத்து. ஐஸ்வர்யா ராய் பச்சனின் காரை ஒரு பேருந்து பின்புறமாக மோதியது’ என குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் கார் விபத்து வீடியோ வைரல் வீடியோ பார்க்கும்போது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்தை நிறுத்தி, ஐஸ்வர்யாவின் காரை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். அந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த வீடியோவில் விபத்தில் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இணைய பயனர்கள் வீடியோவைப் பார்த்து வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விபத்து வீடியோவைப் பார்த்த பிறகு, ஒரு இணைய பயனர் கருத்து பெட்டியில், “பேருந்து ஓட்டுனருக்கு எதுவும் ஆகவில்லையே’ என எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ‘ஜெயா – இது அடிக்க வேண்டிய இடமா’ என தெரிவித்துள்ளார்.

ஒரு பயனர், “பேருந்து சேதமடைந்தது, காருக்கு எதுவும் ஆகவில்லை” என்று எழுதியுள்ளார். இன்னொரு பயனர், ‘காருக்கு ஒரு கீறல் கூட இல்லை, இதில் இவ்வளவு சத்தம் போடுகிறார்கள், தினமும் எத்தனை பேர் மோதுகிறார்கள், அவர்களை கவனியுங்கள்’ என எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர் ‘இது ஜெயாபச்சனின் காராக இருந்திருந்தால் தெரியும்’ என எழுதியுள்ளார். இன்னொருவர், ‘பேருந்தில் அனைவரும் நலமாக உள்ளனரா.? என்று எழுதியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக விரைவில் ஜஸ்வர்யா ராய் விளக்கம் கொடுப்பார் எதிர்பார்க்கலாம்.

aishwaryarai car hit with mumbai bus viral news
aishwaryarai car hit with mumbai bus viral news