Adichu Thookku

Adichu Thooku Video Song : நேற்று வெளியான விஸ்வாசம் படத்தின் பாடலால் யூ ட்யூபையே கதி கலங்க விட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விஸ்வாசம் திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

விரைவில் விஸ்வாசம் 2? – அதிரடி தகவலை வெளியிட்ட சிவா.!

இந்நிலையில் நேற்று சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தபடி மாலை 7 மணிக்கு லஹாரி மியூசிக் நிறுவனத்தின் யூ ட்யூப் பக்கத்தில் அடிச்சு தூக்கு என்ற வீடியோ பாடல் வெளியாகி இருந்தது.

பாடல் வெளியானதும் ரசிகர்கள் பலரும் விடீயோவை தேடவே யூ ட்யூப் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக ஹாங் ஆகியது.

இதனால் ஹிட்ஸ் மிகவும் குறைவாகவே காண்பிக்கப்பட்டது. லைக்ஸ் தொடர்ந்து 0 விலேயே இருந்ததால் ரசிகர்கள் நான் தான் பர்ஸ்ட் லைக்ஸ் என கமெண்ட் கொடுத்து உள்ளனர்.

எவ்வித முகமூடியும் இல்லாத மனிதர் அஜித் – மாபெரும் நடிகர் பேச்சு.!

இதனையடுத்து தற்போது வரை இந்த பாடல் யூ ட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களையும் 230 K லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.