viswasam-2

Viswasam 2 : விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்பிருப்பதாக இயக்குனர் சிவா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணம் – சிவா சொல்லும் புது விளக்கம்.!

இதற்கு முன்னதாக சிவா – அஜித் கூட்டணியில் வெளியான விவேகம் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த விஸ்வாசம் திரைப்படம் அமைந்து விட்டதால் இதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஸ்வாசம் 2 உருவாகுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஸ்வாசம் உண்மையான வசூல் – இயக்குனர் சிவா இப்படி சொல்லிட்டாரே!

அதற்கு சிறுத்தை சிவா இதே போல் உணர்ச்சிகரமான கதை அமைந்து வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஸ்வாசம் 2 இயக்குவேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.