Thala Ajith

Thala Ajith : பொது நிகழ்ச்சிகளில் தல அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? என இயக்குனர் சிவா விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா நான்காவது முறையாக இயக்கி இருந்தார்.

தலயா? தளபதியா? – இணையத்தை கலக்கும் கல்லூரி மாணவர்களின் அலப்பறை.!

பொதுவாகவே அஜித்தை படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும். சில சமயங்களில் ஏர் போர்டில் பார்க்கலாம். மற்றபடி வேறு எங்கேயும் அஜித்தை அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது.

இதற்கான காரணம் என்ன என சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அஜித் வெளியே வந்தால் ரசிகர்கள் கூட்டமாக கூடி விடுகின்றனர்.

இதனால் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டு விடுகிறது. இது தான் பொது நிகழ்ச்சிகளை தல அஜித் தவிர்ப்பதற்கான முக்கிய காரணம் என கூறியுள்ளார்.

அஜித்தை அடுத்து விரைவில் விஜயுடன் இணையும் சிவா – அவரே வெளியிட்ட தகவல்.!

மேலும் தல அஜித் எனக்கு நண்பன் அல்ல நல்ல அண்ணன். அவருக்கு என் தொழில் மீது மிக பெரிய மதிப்பு உள்ளது. அதே போல் எனக்கும் அவரது தொழில் மீது நிறைய மரியாதை உண்டு எனவும் கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.