
Thala Ajith : எவ்வித முகமூடியும் இல்லாமல் வாழ்ந்து வரும் நடிகர் தல அஜித் என மாபெரும் நடிகர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சமீபத்தில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் பாஜகவில் இணைந்ததை அடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு எனக்கு அரசியல் ஆசை இல்லை என தெளிவுபடுத்தி இருந்தார்.
அஜித்தை கைது செய்ய வேண்டும் – பிரபலத்தின் பரபரப்பு பேச்சு!
இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மாபெரும் நடிகரான ராஜ்கிரண் அஜித்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தல அஜித் எவ்வித முகமூடியும் இல்லாமல் யாரையும் ஏய்த்து பிழைக்காமல் தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்.
தூள் கிளப்பும் விஸ்வாசம், அஜித் கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
எல்லோரையும் சமமாக பார்க்கும் நபர், நேர்மையான குணம் கொண்ட அன்பு தம்பி தல அஜித் நீண்ட காலம் வாழ வேண்டும் என பாராட்டியுள்ளார்.