Ajith arrested
Ajith arrested

Ajith arrested – நடிகர் அஜித் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசியல் பிரமுகர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியான அன்று வேலூரில் 20 வயது வாலிபர் விஸ்வாசம் படம் பார்க்க பணம் கொடுக்காததால் தந்தையின் முகத்தில் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி இருந்தார்.

அதே போல் விழுப்புரத்தில் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து 7 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இதற்கெல்லாம் அஜித்தே முழு பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டுமென பிரபல தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் வி.சி.க கட்சி சார்பாக கலந்து கொண்டு பேசிய வன்னி அரசு கூறியுள்ளார்.

வன்னி அரசுவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ரசிகர்கள் வன்னி அரசுவை விமர்சனம் செய்து வருகின்றனர்.